தலைமுடி போல் வளர்ச்சி.. புருவத்தை அழகாக்க முயற்சித்து பிரச்சினையில் சிக்கிய பெண்!
புருவ முடிக்காக அறுவைச் சிகிச்சை செய்து புதிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறார் பெண் ஒருவர்.
நியூயார்க்: புருவத்தை அழகாக்க செய்து கொண்ட அறுவைச் சிகிச்சை மூலம் புதிய பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
ஒவ்வொருவருக்கும் தலைக்கு மேல் இருக்கிற 'ஆயிரம்' பிரச்சினைகளில் முக்கியமானது தலைமுடி உதிர்வுதான். முன்பெல்லாம் வயதானவர்களின் பிரச்சினையாக மட்டும் இருந்த இது, இப்போது மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலால் எல்லோருக்கும் பொதுவானதாகி விட்டது. சிலருக்கு தலைமுடி மட்டுமில்லாமல், புருவ முடியும் சரியாக வளராமல் பிரச்சினை செய்யும்.
இதற்காக பல நவீன சிகிச்சைகள் வந்து விட்டாலும், அவை எல்லோருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. இந்த அமெரிக்கப் பெண்ணும் அவர்களில் ஒருவர்தான். புருவ முடி வளர்ச்சிக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர், அல்லல் பட்டு வரும் செய்திதான் இணையத்தில் வைரலாகியுள்ளது

புருவ முடி பிரச்சினை
இங்கிலாந்தைச் சேர்ந்த 36வயது பெண் இசபெல் குட்சி. இவருக்கு மற்றவர்களைப் போல் அடர்த்தியான புருவம் இல்லாததால், மிகவும் சிரமங்களைச் சந்தித்து வந்துள்ளார். தினமும் தனது புருவத்தை அழகாக வரைவதற்காக மட்டும் சுமார் அரை மணி நேரத்தை அவர் செலவிட்டு வந்துள்ளார்.

புதிய சிகிச்சை
இந்நிலையில்தான், அமெரிக்காவில் சென்றிருந்தபோது, போலந்தில் புருவ முடிக்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறார் இசபெல். அதனைத் தொடர்ந்து, அந்த அறுவைச் சிகிச்சை தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடி பெற்றுள்ளார். பின்னர் நேரடியாகச் சென்று போலந்தில் தனது புருவங்களை அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றி அமைத்துள்ளார்.

புதிய அழகான புருவம்
அவரது தலையின் பின்பக்கத்தில் இருந்து சிறிது முடியை எடுத்து, அதனை புருவத்தில் கையாலேயே நடுவது போன்று, இந்த அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. சுமார் மூன்று மணி நேரம் செலவழித்து, இசபெல்லின் அழகான தடிமனான புருவத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். முதன்முறையாக தான் விரும்பியபடி, அழகான அடர்த்தியான புருவத்தைப் பார்த்து அசந்து போய்விட்டார் இசபெல்.

நீளமாக வளர்ந்த முடி
ஆனால் அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தலையில் இருந்து எடுக்கப்பட்ட முடி என்பதால், அவரது புருவமும் தலைமுடி மாதிரி நீளமாக வளரவும் அதிர்ந்து போய்விட்டார் இசபெல். வேறு வழியில்லாமல் மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டுவது போல், புருவமுடியையும் இப்போது வெட்டத் தொடங்கி விட்டார்.

பிடிக்காத புருவம்
"என்ன செய்வது அழகான புருவங்கள் வேண்டுமென்றால் ஏதாவது செய்துதானே ஆக வேண்டும். முன்பெல்லாம் முகத்திற்கு அருகில் புகைப்படம் எடுப்பதென்றாலே எனக்கு பிடிக்காது. காரணம் எனது அமைப்பில்லாத புருவங்கள். இதனாலேயே நண்பர்கள் யாராவது புகைப்படம் எடுத்தால்கூட, கைகளால் எனது புருவத்தை மூடிக் கொண்டுதான் போஸ் கொடுப்பேன்.

புதிய தன்னம்பிக்கை
ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை. இந்தப் புதிய புருவங்கள் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. சில சிரமங்கள் இருந்தாலும், இந்தப் புதிய புருவங்களால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என தன் புருவ முடி அறுவைச் சிகிச்சைப் பற்றி கூறுகிறார் இசபெல்.

செலவும் குறைவு
இந்த சிகிச்சை இங்கிலாந்திலும் கிடைக்குமென்றாலும், அங்கு அதற்கு 5 ஆயிரம் பவுண்ட் இந்திய மதிப்பில் ரூ. 4.7 லட்சம்) செலவாகுமாம். ஆனால் போலந்தில் 1,500 பவுண்ட்டில் ( இந்திய மதிப்பில் ரூ. 1.4 லட்சம்) இந்த அறுவைச் சிகிச்சையை செய்து முடித்துள்ளார் இசபெல். அறுவைச் சிகிச்சையின் போது போடப்பட்ட மயக்க மருந்து ஊசிகளின் வலி மட்டும் பொறுக்க முடியாததாக இருந்ததாகவும், ஆனால் தன் அழகான புருவங்களைப் பார்க்கும்போது அந்த வலியும் மறந்து விட்டதாகவும் இசபெல் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications