அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி?
நியூயார்க்: 2003-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது, வெறும் 26 நாட்களில் சதாம் உசேனின் ஒட்டுமொத்த ராணுவக் கட்டமைப்பும் சீட்டுக்கட்டாய் சரிந்தது. அதே பாணியில், 2026 பிப்ரவரி 28 அன்று 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தின.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஐ.ஆர்.ஜி.சி (IRGC) தளபதி முகமது பக்பூர் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைமைகளையும் குறிவைத்து ஏவுகணைகள் பாய்ந்தன. தலைமையை அழித்துவிட்டால் ஈரானின் ராணுவம் முடங்கிவிடும் என்று கணக்கு போட்டது அமெரிக்கா. ஆனால், இன்று போர் தொடங்கி 14 நாட்கள் ஆகியும், ஈரான் ஓய்ந்தபாடில்லை. மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் ஈரானின் ஏவுகணைகளும் ட்ரோன்களும் இடைவிடாது மழையெனப் பொழிந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் இந்தத் தப்புக் கணக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் - மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாஃபரி.

யார் இந்த ஜாஃபரி? 'மொசைக்' தற்காப்பு என்பது என்ன?
ஈரான்-ஈராக் போரில் கலந்துகொண்ட அனுபவம் கொண்ட ஜாஃபரி, 2003-ல் ஈராக் வீழ்ந்த விதத்தை மிக நுணுக்கமாக கவனித்தார். சதாம் உசேனின் ராணுவம் ஏன் தோற்றது என்பதற்கு அவர் கண்டறிந்த விடை: "அதிகப்படியான மத்தியமயமாக்கல்" (Centralization). பாக்தாத்தில் இருந்து உத்தரவு வராமல் ஈராக் ராணுவத்தின் ஒரு சிறு பிரிவு கூட நகர முடியாமல் இருந்ததுதான் அதன் தோல்விக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
இதனை முறியடிக்க அவர் உருவாக்கியதுதான் 'டிசென்ட்ரலைஸ்டு மொசைக் டிஃபன்ஸ்' (Decentralized Mosaic Defence).
"நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவின் தோல்விகளைப் படித்து வருகிறோம். எங்கள் தலைநகரில் குண்டு வீசுவது போரை நடத்தும் எங்கள் திறனைப் பாதிக்காது. எப்போது, எப்படிப் போரை முடிக்க வேண்டும் என்பதை இந்த மொசைக் தற்காப்பு முறைதான் தீர்மானிக்கும்." - சையத் அப்பாஸ் அரக்சி, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் (X தளம்).
31 துண்டுகள்... ஒரு பெரும் வலிமை!
ஜாஃபரியின் இந்தத் திட்டப்படி, ஈரானின் ராணுவம் ஒற்றை மையத்தின் கீழ் இயங்காது. மாறாக, ஈரான் 31 தன்னாட்சி பெற்ற மாகாணப் பிரிவுகளாக (Provincial Commands) பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி தலைமையகம், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் உண்டு.
நாட்டின் உயர்மட்டத் தலைமை கொல்லப்பட்டாலும் அல்லது தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், அந்தந்த மாகாணத் தளபதிகள் முன்பே திட்டமிடப்பட்ட இலக்குகளைத் தாக்க முழு அதிகாரம் பெற்றுள்ளனர்.
இது ஜெர்மனியின் 'Auftragstaktik' எனும் ராணுவக் கோட்பாட்டைப் போன்றது. அதாவது, இலக்கு என்னவென்று தெரியும், அதை எப்படி அடைய வேண்டும் என்பதில் கீழ்நிலை அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் உண்டு.
களத்தில் என்ன நடக்கிறது?
பிப்ரவரி 28 தாக்குதலில் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஈரானின் பதிலடி தொடங்கியது. பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் என அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஏவுகணைகள் பாயத் தொடங்கின. அமீரகத்தின் ஷார்ஜா நகரில் உள்ள கிடங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஈரானின் ராணுவம் 'ஆட்டோ பைலட்' முறையில் இயங்குவதை உலகுக்கு உணர்த்தியது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சில நடுநிலை நாடுகள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினாலும், களத்தில் உள்ள தன்னாட்சிப் படைகள் தங்களது தாக்குதலைத் தொடர்ந்தே வருகின்றன.
ஜாஃபரியின் வரலாறு
1979 புரட்சிக்குப் பிறகு ஐ.ஆர்.ஜி.சி-யில் இணைந்த ஜாஃபரி, ஈரான்-ஈராக் போரின் மூலம் படிப்படியாக உயர்ந்தவர். 2005-ல் பாதுகாப்பு வியூக ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்தபோதுதான் இந்த 'மொசைக்' தத்துவத்தை அவர் உருவாக்கினார். 2007 முதல் 2019 வரை ஐ.ஆர்.ஜி.சி-யின் தலைமைத் தளபதியாக இருந்து, இந்தத் திட்டத்தை ஈரான் முழுவதும் வேரூன்றச் செய்தார்.
நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஷனகா அன்செலம் பெரேரா கூறியது போல, "இந்த மொசைக் கோட்பாடு ஈரானை வெற்றி பெற வைக்காமல் போகலாம், ஆனால் அது ஈரானை ஒருபோதும் தோற்கடிக்க விடாது."
தலைமை போனாலும் தனித்து இயங்கும் இந்த 'ஹைட்ரா' (Hydra) போன்ற ராணுவக் கட்டமைப்பு, அமெரிக்காவை ஒரு நீண்ட மற்றும் விலையுயர்ந்த போருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. ஈரானின் வீழ்ச்சியை எதிர்பார்த்து நின்றவர்களுக்கு, ஜாஃபரியின் 'மொசைக்' வியூகம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து?












Click it and Unblock the Notifications