நீலகிரி ஜெனிபர்.. வாடகைக்கு குடி சென்று.. வீட்டுக்காரரே "வீட்டுக்காரராய்".. ஆசையால் ஆடிப்போன கூடலூர்
ஊட்டி: குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.. பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்கள் பெருகி வருகின்றன.. மற்றொரு புறம் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.. இதற்கு நடுவில் கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் தமிழகத்தில் பெருகி வருகின்றன. அந்தவகையில் கள்ளக்காதலுக்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நீலகிரியில் கள்ளக்காதலியையே கொலை செய்துள்ளார் ஒருவர்..
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி காசிம்வயல்.. இங்கு வசித்து வருபவர் ஜெனிபர் கிளாடிஸ்.. இவருக்கு 35 வயதாகிறது.. திருமணமாகிவிட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இதே பகுதியில் குடியிருந்தவர் வசித்தவர் அலி.. 38 வயதாகும் அலி ஒரு மீன் வியாபாரி ஆவார்.. திருமணமாகி, மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.. இந்நிலையில் அலிக்கும், ஜெனிபர் கிளாடிசுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. இந்த நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
மீண்டும் திருமண பேச்சு
இதனால், அடிக்கடி ஜெனிபர் வீட்டுக்கு அலி சென்று வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் கல்யாண பேச்சை எடுத்தார் ஜெனிபர்.. அலி திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கிளாடிஸ் அடிக்கடி அலியிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் அலி நேற்றிரவும், ஜெனிபர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. ஆனால், அலி போதையில் சென்றிருக்கிறார்.. அப்போது கொஞ்ச நேரத்திலேயே கல்யாண பேச்சை ஆரம்பித்துள்ளார் ஜெனிபர்.. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. வழக்கத்துக்கு மாறாக, நேற்றைய தினம் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
போதையில் சென்ற அலி
ஏற்கனவே போதையிலிருந்த அலி, இதனால் ஆத்திரமடைந்து, ஜெனிபரை கத்தியால் வெட்டிவிட்டார்.. கழுத்து, கையில் வெட்டியெறிந்ததில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு உயிரிழந்தார்..
ஜெனிபரின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அலி, கத்தியுடன் கூடலூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்து, நடந்த விஷயத்தை கூறினார். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் அலியை கைது செய்தனர்.. பிறகு ஜெனிபரின் வீட்டிற்கு வந்து அவரது சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணத்துக்கு தொல்லை
கொலை செய்யப்பட்ட ஜெனிபர் கிளாடிஸ், அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்திருக்கிறார்.. கணவனை பிரிந்த ஜெனிபருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறர்கள்.. அதேபோல அலியும் மனைவியை சமீபகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்..
அலிக்கு சொந்தமான கட்டிடத்தில்தான் ஜெனிபர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.. அந்தவகையில், அலியும், ஜெனிபரும் கடந்த ஒரு வருடமாகவே 2 பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இருவருக்குமே துணை இல்லாததால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜெனிபர் கூறியதாகவும், அதற்கு அலி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications