பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் இறுதி கட்ட வாக்குப் பதிவு: 31% வேட்பாளர்கள் கிரிமினல்கள்; 30% கோடீஸ்வரர்கள்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 78 தொகுதிகளில் 31% வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள். இவர்களில் 30% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.

Recommended Video

    Bihar Assembly Election | இறுதிக்கட்ட தேர்தல் நிலவரம்

    பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. 16 மாவட்டங்களில் 78 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த இறுதி கட்ட களத்தில் மொத்தம் 1208 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களில் 110 பேர் பெண்கள். இந்த வேட்பாளர்களின் குற்ற பின்னணி, சொத்து விவரம் குறித்த ஆய்வுகளை ஜனநாயக சீரமைப்புக்கான அமைப்பு மற்றும் பீகார் தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

    பீகார்: 'சிஏஏ' வெறுப்பு பேச்சால் வெடித்தது மோதல்.. யோகியை 'நான்சென்ஸ்' என்று விளாசிய நிதிஷ் குமார் பீகார்: 'சிஏஏ' வெறுப்பு பேச்சால் வெடித்தது மோதல்.. யோகியை 'நான்சென்ஸ்' என்று விளாசிய நிதிஷ் குமார்

    குற்றப் பின்னணி

    குற்றப் பின்னணி

    இதில், ஆர்ஜேடியின் மொத்தம் 44 வேட்பாளர்களில் 32 பேர் அதாவது 73% பேர் குற்ற பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 22 பேர் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    பாஜக, இதர கட்சிகள்

    பாஜக, இதர கட்சிகள்

    பாஜகவின் 34 வேட்பாளர்களில் 26 பேர் குற்ற பின்னணி உடையவர்கள். இதில் 22 பேர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜேடியூவின் 21, காங்கிரஸின் 19, எல்ஜேபியின் 18 வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

    132 வழக்குகளுடன் பப்பு யாதவ்

    132 வழக்குகளுடன் பப்பு யாதவ்

    நாளை வாக்குப் பதிவு நடைபெறும் 78 தொகுதிகளில் 72 தொகுதிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜேபிபி-எல் கட்சியின் தலைவரான மாதேபுரா தொகுதியில் போட்டியிடும் பப்பு யாதவ் மீது மட்டும் 132 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

    கோடீஸ்வர வேட்பாளர்கள்

    கோடீஸ்வர வேட்பாளர்கள்

    ஆர்.எல்.எஸ்.பி வேட்பாளர் பிகே சிங்தான் நாளை தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களில் கோடீஸ்வரர். அவரது சொத்து மதிப்பு ரூ85.89 கோடி. அவருக்கு அடுத்ததாக ரூ45.37 கோடி சொத்து மதிப்புள்ளவர் ஆர்ஜேடி வேட்பாளர் ஓம்பிரகாஷ் செளத்ரி. சுயேட்சை வேட்பாளரான ஷங்கர் குமார் ஜாவுக்கு ரூ32.19 கோடி சொத்துகள் உள்ளனவாம். ஆர்ஜேடியின் 35 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்; பாஜக, எல்ஜேபியின் தலா 31 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாம். ஜேடியூவின் 30, காங்கிரஸ் கட்சியின் 17 வேட்பாளர்களின் சொத்து மதிப்பும் கோடிகளை தாண்டியதாம்.

    வேட்பாளர்களின் கல்வி அறிவு

    வேட்பாளர்களின் கல்வி அறிவு

    499 வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள்; 552 வேட்பாளர்கள் பட்டதாரிகள். 126 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். 5 பேர் கல்வி அறிவு பெறாதவர்கள். 12 பேர் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள்.

    English summary
    In Bihar,31% of the candidates in Third Phase Polls facing Ciriminal Cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X