நானா? நிதிஷ்குமாரா? யாருடைய ஆதரவு தேவை? முடிவு செய்யுற நேரம் இது.. பாஜகவை மிரட்டும் சிராக் பாஸ்வான்
பாட்னா: இனிவரும் நாட்களில் என்னுடைய ஆதரவு தேவையா? நிதிஷ்குமாரின் ஆதரவு தேவையா? என்பதை பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டிய நேரம் இது என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் எச்சரித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் மட்டும் கூட்டணி என கூறினார் சிராக் பாஸ்வான். அதேநேரத்தில் பா.ஜ.க.வுக்காக அதன் கூட்டணி கட்சியான ஜே.டி.யூவை எதிர்த்து வேட்பாளர்களையும் நிறுத்தினார் சிராக் பாஸ்வான்.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியின் இந்த நடவடிக்கையால் ஜே.டி.யூ. பல இடங்களில் தோல்வியை தழுவ நேரிட்டது. பா.ஜ.க. நினைத்தது போலவே அந்த கட்சியை விட ஜே.டி.யூ. குறைவான இடங்களில்தான் வெல்ல முடிந்தது.

பாஸ்வான் கட்சியில் பிளவு
இதற்கு பிரதிபலனாக தமக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என காத்திருந்தார் சிராக் பாஸ்வான். ஆனால் திடீரென லோக் ஜனசக்தி கட்சியின் 5 எம்.பி.க்கள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி தங்களை தனி அணியாக செயல்படக் கோரி லோக்சபா சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனை லோக்சபா சபாநாயகரும் ஏற்றுக் கொண்டார்.

ஜேடியூ, பாஜக மீது அதிருப்தி
இதனால் லோக் ஜனசக்தி கட்சியில் சிராக் பாஸ்வான் தனிமைப்படுத்தப்பட்டார். தமது கட்சி இப்படி இரண்டாக பிளவுபட்ட நேரத்தில் பா.ஜ.க எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. இதனால் கொந்தளித்த சிராக் பாஸ்வான், தமது கட்சியை உடைத்ததன் பின்னணியில் பா.ஜ.க, ஜேடியூ இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வந்தார்.

எப்போதும் பாஜக ஆதரவு
அத்துடன் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கை கோர்த்து செயல்படும் முடிவையும் சிராக் பாஸ்வான் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் பாட்னாவில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சிராக் பாஸ்வான் கூறியதாவது: சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. என ஒவ்வொரு பிரச்சனையின் போது நான் பா.ஜ.க.வையே ஆதரித்தேன்.

பாஜக கையில் முடிவு
ஆனால் இந்த விவகாரங்களில் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்தவர் நிதிஷ்குமார். தற்போது நிதிஷ்குமாரின் ஆதரவு தேவையா? என்னுடைய ஆதரவு தேவையா? என்பதை பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. இதனை பா.ஜ.க.தான் வெளிப்படுத்த வேண்டும்.

ஆர்ஜேடியுடன் கூட்டணியா?
என்னுடைய தந்தையார் ராம்விலாஸ் பாஸ்வானும் லாலு பிரசாத் யாதவும் மிக நெருங்கிய நண்பர்கள். நானும் ஆர்ஜேடி தற்போதைய தலைவர் தேஜஸ்வி யாதவும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். தேஜஸ்வி என்னுடைய தம்பி.. ஆர்ஜேடியுடன் கூட்டணி வைப்போமா? இல்லையா? என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். இவ்வாறு சிராக் பாஸ்வான் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications