Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரில் பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமாருக்கு செக்! முதல்வராக தேஜஸ்வி யாதவுக்கு வாய்ப்பு! எப்படி?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு மீண்டும் முதல்வரான நிதிஷ் குமாரின் பதவிக்கு ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நிதிஷ் குமாரின் கட்சி ஆதரவின்றி ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பீகாரில் கடந்த 2020ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. ஐக்கி ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வரானார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் நிதிஷ் குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டார். அதன்பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதோடு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்பட பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார்.

 முதல்வரான நிதிஷ் குமார்

முதல்வரான நிதிஷ் குமார்

இதன்மூலம் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் பலம் கிடைத்தது. இதையடுத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். கடந்த புதன் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். அதாவது பீகாரில் 242 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க 121 எம்எல்ஏக்களின் ஆதவு தேவை. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான ‛மகாகத்பந்தன்' 160 எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் கிடைத்தது. இதுதான் தற்போது விவாதப்பொருளாகி உள்ளது.

தேஜஸ்வி யாதவுக்கு முதல்வராக வாய்ப்பு

தேஜஸ்வி யாதவுக்கு முதல்வராக வாய்ப்பு


அதாவது நிதிஷ் குமாருக்கு மொத்தம் 42 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர் முதல்வராகி உள்ளார். ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் 79 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 19 எம்எல்ஏக்கள், இடதுசாரி கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள், எச்ஏஎம் கட்சியின் 4 எம்எல்ஏக்கள், ஓவைசி கட்சியின் ஒரு எம்எல்ஏ, சுயேச்சை ஒருவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக ஓட்டளித்து வெற்றி பெற செய்தனர். இந்நிலையில் தான் தேஜஸ்வி யாதவ் நினைத்தால் நிதிஷ் குமார் மற்றும் அவரது கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவின்றி முதல்வராகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 120 எம்எல்ஏக்களின் ஆதரவு

120 எம்எல்ஏக்களின் ஆதரவு

அதாவது தற்போதைய கூட்டணியில் நிதிஷ் குமாரின் கட்சியில் உள்ள 42 எம்எல்ஏக்களை கணக்கில் கொள்ளாவிட்டால் மகாகத்பந்தன் கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் 79 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 19 எம்எல்ஏக்கள், இடதுசாரி கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள், எச்ஏஎம் கட்சியின் 4 எம்எல்ஏக்கள், ஓவைசி கட்சியின் ஒரு எம்எல்ஏ, சுயேச்சை ஒருவர் என மொத்தம் 120 பேரின் ஆதரவு உள்ளது. ஆட்சியமைக்க 121 எம்எல்ஏக்கள் தான் வேண்டும் என்றால் இன்னும் ஒரு எம்எல்ஏ மட்டும் தான் தேஜஸ்வி யாதவுக்கு தேவை. இதனையும் பல்வேறு வழிகளில் அவரால் பெற முடியும்.

மீண்டும் பீகாரில் அரசியல் புயல் வீசலாம்

மீண்டும் பீகாரில் அரசியல் புயல் வீசலாம்

இதனை பாஜக அல்லது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து அவர் பெற முயன்றால் அவருக்கு வெற்றி கிடைக்கும். இது ஒரு வழி எனினும் அந்த எம்எல்ஏ மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுத்து பதவி பறிக்கப்பட்டு சிக்கலை ஏற்படுத்தும். மாறாக ஐக்கிய ஜனதாதளம் அல்லது பாஜகவில் இருந்து 4 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தால் சட்டசபையில் பலம் 238 ஆக குறையும். இதன்மூலம் ஆட்சியமைக்க தேவையான 120 எம்எல்ஏக்களின் உதவியுடன் நிதிஷ் குமாரின் கட்சியை புறக்கணித்து தேஜஸ்வி யாதவ் ஆட்சியமைக்க முடியும். இல்லாவிட்டால் தனக்கான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிதிஷ் குமாருக்கு பாடம் புகட்டும் வகையில் பாஜகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தால் மிகவும் எளிதான முறையில் நிதிஷ் குமார் ஆதரவின்றி தேஜஸ்வி யாதவ் முதல்வர் பதவியை பெறலாம். இதனால் தேஜஸ்வி யாதவ் நினைத்தால் பீகாரில் மீண்டும் ஒரு அரசியல் புயல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

 சாத்தியமா?

சாத்தியமா?

பீகாரில் தேஜஸ்வி யாதவுக்கு சாதகமான சூழல் நிலவினாலும் கூட அவர் இதனை பயன்படுத்த மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தேஜஸ்வி யாதவுக்கு வயது மிகவும் குறைவு தான். இதனால் அவர் பீகார் அரசியலில் சாதிக்க வாய்ப்புள்ளது. எனவே முதல்வர் பதவியை குறுக்கு வழியில் பிடிப்பது என்பது அவரது பெயரை கெடுக்கும். இதனால் அவர் முயற்சிக்கமாட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தேஜஸ்வி ரிஸ்க் எடுப்பாரா?

தேஜஸ்வி ரிஸ்க் எடுப்பாரா?

மேலும் பீகார் அரசியலில் தொடர்ந்து பாஜக, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்து நிதிஷ் குமார் முதல்வர் பதவியை கைப்பற்றி வருகிறார். இதனால் அவரது கட்சியின் செல்வாக்கு குறைந்து வருகிறது. 2010ல் நிதிஷ் குமாருக்கு 115 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை 2015ல் 71 ஆக குறைந்த நிலையில் 2020ல் 43 எம்எல்ஏக்களாக சரிந்தது. இதனையும் தேஜஸ்வி யாதவ் கவனத்தில் கொள்வார். இந்த நிலையில் தனக்கு வரக்கூடாது என அவர் உஷாராக இருப்பார். அதோடு பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செல்வாக்கு குறைந்து வரும் சமயத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் நிதிஷ் குமார் ஆட்சியை கவிழ்த்தால் அவர் மீது இரக்கம் ஏற்பட்டு செல்வாக்கு உயரலாம். இதனால் தற்போது முதல்வர் பதவிக்கு தேஜஸ்வி யாதவ் ரிஸ்க் எடுக்கமாட்டார்.

 கைக்கொடுக்குமா காங்கிரஸ்?

கைக்கொடுக்குமா காங்கிரஸ்?

மேலும் நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் நிதிஷ் குமாருடன் தொடர்பில் உள்ளார். இதனால் தேஜஸ்வி யாதவ் ஆட்சியை கவிழ்த்தால் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்க சாத்தியம் இல்லை. ஒருவேளை தேஜஸ்வி காங்கிரஸ் கட்சியிடம் பேசினாலும் அது தற்போதைய சந்தரப்பவாத அரசியலுக்கான கூட்டணியாக தான் இருக்குமே தவிர அடுத்த சட்டசபை தேர்தலின்போது தொடர வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் செல்வாக்காக உள்ளது. இத்தகைய சூழலில் செல்வாக்கு இழந்து வரும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தான் அடுத்த தேர்தலில் கூட்டணி வைக்கலாம். அப்போது தான் காங்கிரஸ் கட்சி பீகாரில் தங்களின் இருப்பை காத்து கொள்ள முடியும். இதனால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது தேஜஸ்வி யாதவுக்கு எதிராக தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் தேஜஸ்வி முதல்வர் பதவியில் கண் வைத்து தற்பேதைய சூழலில் காய் நகர்த்த மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+