இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறார் நிதிஷ்.. மகாபந்தன் கூட்டணியை கலாய்த்த பாஜக
பாட்னா: பீகாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகாபந்தன் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் அரசியலில் நிதிஷ்குமாரும், தேஜஸ்வி யாதவும் ஈடுபடுவதாக விமர்சித்துள்ளது.
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது.
இதில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். எனினும் ஆட்சி அமைத்ததில் இருந்தே, பாஜகவுடன் நிதிஷ் குமாருக்கு மனக்கசப்பு இருந்து வந்தது.

நிதிஷ் குமாரின் அரசியல்
இதன் காரணமாக எப்போதும் பாஜனதா எடுக்கும் அதிரடி திருப்பம் வாய்ந்த அரசியல் வியூகத்தை இந்த முறை நிதிஷ் குமார் கையில் எடுத்தார். அதன்படி அவர் பாஜனதாவுடனான கூட்டணியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்ததோடு, ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தையும் அவர் அளித்தார். தொடர்ந்து வேகமாக காய் நகர்த்திய நிதிஷ் குமார் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொண்டார். தொடர்ந்து இந்த கூட்டணியின் தலைவரான நிதிஷ் குமார் 8-வது முறையாக மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பை அலங்கரித்தார். மாநிலத்தின் துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

ட்விட்டரில் கடிதம்
பாஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது தொடர்பாக நிதிஷ் குமாரை பாஜனதா வசைபாடி வந்தது. இதற்கிடையே மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் பீகாரின் முன்னாள் துணை முதல்வர் ரேணு தேவி ஆகிய இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளனர். பீகாரின் தொடக்க கல்வி இயக்குனரகத்தின் சுற்றறிக்கை அதில் இடம் பெற்றுள்ளது. நிதிஷ்குமார் 8-வது முறையாக கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அதே நாளில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஆசிரியர்கள் சதவீதம் எவ்வளவு?
தொடக்க கல்வி இயக்குனர் ரவி பிரகாஷ் பெயரில் வெளியிடபட்டுள்ள சுற்றறிக்கையில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் உருது ஆசிரியர்கள் காலியிடம் எத்தனை உள்ளன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதாவது, "எத்தனை பொது ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்? எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன? எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன? நியமிக்கப்பட்ட மொத்த ஆசிரியர்களில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சதவீதம் எவ்வளவு? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

உருது ஆசிரியர்கள் விவகாரத்தில் ஆலோசனை
இந்த சுற்றறிக்கையை பகிர்ந்து ஐக்கிய ஜனதா தளம்-ஆர்ஜேடி கூட்டணி அரசை கடுமையாக விளாசியுள்ள கிரிராஜ் சிங், "சமஸ்கிருதம் பற்றி எந்த முடிவும் எடுக்காத நிதிஷ் குமார் அரசாங்கம், உருது ஆசிரியர்கள் விவகாரத்தில் ஆலோசனையை தொடங்கியுள்ளது. ஆட்சி அமைத்த 24 மணி நேரத்திற்குள் திருப்திப்படுத்தும் அரசியல் துவங்கிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், முன்னாள் துணை முதல்வர் ரேணு தேவி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், திருப்திபடுத்தும் கடை திறக்கப்பட்ட்டுள்ளது. புதிய அரசில் சமஸ்கிருதம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், உருது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புபவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள்"என்று தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications