பெரம்பலூரில் அமைச்சர் காரை நிறுத்தி கோரிக்கை வைத்த மாணவர்கள்.. அதிகாரிகளுக்கு உடனடியாக பறந்த உத்தரவு
பெரம்பலூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம், பரப்புரை ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திட்டமிட்ட பணிகள், நிறைவேற்றாமல் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர், எழுமூர் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் காரைப் பார்த்த மாணவர்கள் சிலர் கை காட்டி நிறுத்தி பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காரில் சென்ற அமைச்சர்
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு திட்டங்கள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், புதிய மற்றும் நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். எழுமூர் கிராமம் வழியாக அமைச்சர் தனது காரில் சென்றுள்ளார்.
அமைச்சரிடம் பேருந்து வசதி கோரிய மாணவர்
அப்போது, பள்ளி முடிந்து மாணவர்கள் அவ்வழியாகச் சென்றுள்ளனர். அமைச்சர் கார் செல்வதைப் பார்த்த மாணவர் ஒருவர் திடீரென கைகாட்டி காரை நிறுத்தக் கோரியுள்ளார். இதைப் பார்த்த அமைச்சர் சிவசங்கர் காரில் இருந்து இறங்கி வந்து மாணவர்களிடம் பேசியுள்ளார். அப்போது அந்த மாணவர், ஆயக்குடிக்கு நேரடியாக செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. அப்பகுதிக்குச் சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் சிவசங்கர் உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை அழைத்து, ஆயக்குடி வழித்தடத்தில் பேருந்து இயக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, மாணவர்களிடம் பேசிய அமைச்சர் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications