புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை
புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்பார்த்த தொகுதி கிடைக்காததால் பாஜக அண்ணாமலை அப்செட்டாகியுள்ளார். செய்தியாளர்களிடம் புதுச்சேரி அரசியல் குறித்து பக்கம் பக்கமாக பேசிய அவர், தமிழ்நாடு அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் கப் சிப்பென்று கிளம்பிவிட்டார்.
புதுச்சேரியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எங்குமே இல்லாத விசித்திரமான இந்தியா கூட்டணி புதுச்சேரியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், மீதியுள்ள 14 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்பதுதான் கணக்கு. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. இன்று காங்கிரஸ் கட்சியினர் 16 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

மக்கள் குழப்பம்
கட்சியை கடந்து அவர்களாக வேட்புமனுத்தாக்கல் செய்த காரணத்தால் சஸ்பெண்ட் செய்துள்ளனர். புதுச்சேரியில் இந்தி கூட்டணி குழப்பமான கூட்டணி தான். அது மட்டுமல்லாமல் விசிக திருமாவளவன் அவர்களின் கூட்டணி தர்மத்தை எல்லாம் மீறி அவர்களும் 3 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களும் கூட்டணி தர்மத்தை மீறி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இதனால் மக்களே பல இடங்களில் குழப்பமடைந்துள்ளனர்.
மரியாதை இல்லை
திமுகவும் உள்ளது, விசிக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளும் உள்ளன என குழம்புகிறார்கள். சில இடங்களில் 4 கட்சிகளின் வேட்பாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஆட்சிக்கு வர முடியும். ஆட்சிக்கு வந்தாலும் எப்படி நிர்வாகம் செய்வார்கள். இவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணிக்குள் மரியாதை இல்லை. ஆட்சிக்கு முன்பே கூட்டணியை உருப்படியாக அமைக்க முடியவில்லை. 30 தொகுதிகளில் பேசி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடியவில்லை. எப்படி இவர்கள் 5 வருடம் மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்குவார்கள்" என்றார்.
அண்ணாமலை கப்சிப்
முன்னதாக இன்று காலை கோவை விமான நிலையத்தில் இருந்து அண்ணாமலை ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்று பிரச்சாரம் செய்தார். கோவை விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள், "பியூஸ் கோயலை சந்திக்கிறீர்களா.. அரசியல் களம் எப்படி உள்ளது, கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார், நீங்கள் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவீர்களா" என்று பல கேள்விகளை எழுப்பினர். அண்ணாமலை அதற்கு பதில் அளிக்காமல் சென்றது குறிப்பிட்டத்தக்கது.
இதே கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை மணிக்கணக்கில் செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்படியிருக்கும் அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.
-
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம்












Click it and Unblock the Notifications