ஓபிஎஸ் ஒரு மண் சுவர், அது கரைந்துவிட்டது.. அடிப்படை அறிவு கூட இல்ல - முன்னாள் எம்.எல்.ஏ அட்டாக்!
புதுச்சேரி : ஓ.பி.எஸ் ஒரு மண் சுவர், அவர் மழையில் கரைந்துவிட்டார். எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இருக்கிறார் ஓபிஎஸ் என கடுமையாகச் சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ புதுச்சேரி அன்பழகன்.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இதுதொடர்பாகப் பேசிய அன்பழகன், கட்சியின் கொள்கை சட்டதிட்டம் எதாவது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியுமா? என கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீக்கிய ஓபிஎஸ்
அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்படி பழனிசாமி ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். புதுச்சேரி மேற்கு மாநில செயலாளரும், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளருமான ஓம் சக்தி சேகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ஈபிஎஸ். அதற்கு பதிலடியாக புதுச்சேரி அ.தி.மு.கவின் கிழக்கு மாநில செயலாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான அன்பழகனை நீக்குவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

புதுச்சேரி அன்பழகன்
இந்நிலையில் இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், "நான்கு எம்.பிக்கள், 63 எம்.எல்.ஏக்கள், 267 செயற்குழு உறுப்பினர்கள், 2,420 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை, பொதுக்குழுவில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டனர்.

ஓபிஎஸ்ஸுக்கு ஏதாவது தெரியுமா?
இந்நிலையில், என்னையும், என்னுடன் சேர்த்து 44 பேரையும் நீக்கியதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடு சட்டதிட்டம் எதாவது இவருக்கு தெரியுமா? உச்சநீதிமன்றம் வரை சென்று தோல்வியடைந்தவர் இவர். கழகத்தின் நடவடிக்கை குறித்து நீதிமன்றம் செல்பவர்கள், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எம்.ஜி.ஆரால் எழுதப்பட்ட விதி.

பேட்டை ரௌடி போல
முதல்வர் ஸ்டாலினுக்கு எடுப்பு வேலை செய்தவர் ஓ.பி.எஸ். தான் செய்த ஊழல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கழக தொண்டர்கள் மீது பொய்யான தகவல்களை கூறி வருகிறார். துரோகத்தின் ஒட்டுமொத்த உருவமாக ஓ.பி.எஸ் இருக்கிறார். எம்.ஜி.ஆரால் கட்டப்பட்டு, ஜெயலலிதா கட்டிகாத்த தலைமை கழகத்தை பேட்டை ரௌடி போல் செயல்பட்டு உடைத்துள்ளார்.

ஈபிஎஸ் சொல்வதுதான் முடிவு
ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்தை உடைத்தபோதே அவரை எங்கள் மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டோம். எங்களை பற்றி பேசவோ, எங்களை கட்சியில் இருந்து நீக்கவோ ஓ.பி.எஸ்ஸுக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது. கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பொதுக்குழுவின் மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சொல்வதுதான் இப்போது கட்சியின் முடிவு.

ஓபிஎஸ் மண் சுவர்
ஓ.பி.எஸ் ஒரு மண் சுவர். அவர் மழையில் கரைந்துவிட்டார். தி.மு.க-வை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அ.தி.மு.கவை அழிக்கவோ, ஒடுக்கிவிடவோ முடியாது. தி.மு.கவின் சதிச்செயல் ஓ.பன்னீர்செல்வம் மூலம் நிறைவேற்றப்பட்டதால் தலைமைக் கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் உண்மையான அ.தி.மு.க நாங்கள்தான் என்று கூறிக்கொள்ளலாம். அவர்கள் யாரும் அ.தி.மு.கவினர் கிடையாது. கட்சி எங்களிடம் தான் உள்ளது.

புல்லுருவிகள்
பொதுக்குழு கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்த 12 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் பல நபர்களால் தடுக்கப்பட்டனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமையிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். முதலில், புதுச்சேரி அ.தி.மு.கவில் உள்ள புல்லுருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். ஓரிரு மாதங்களுக்குள் எல்லாம் சரியாகி விடும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications