புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுக்கு பேரு தான் 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'-ஆ.. சபாஷ் குட்டீஸ்!

வீட்டில் இருந்தபடியே குழந்தைகள் சுலபமாக கராத்தே கற்பதற்காக இரண்டு குழந்தைகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் சுலபமான வகையில் கராத்தே கற்றுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

Recommended Video

    இதுக்கு பேரு தான் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்-ஆ | twins helps other kids to learn Karate

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் என யாராலும் கணிக்க முடியாதபடி நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்ற பேச்சும் ஒருபக்கம் இருக்கிறது.

    ஒருவேளை மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டாலும் பள்ளிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த வருடம் ஜூலை மாதம் தான் வகுப்புகள் தொடங்கும் என்ற தகவலும் உலா வருகிறது.

    பெற்றோரின் கவலை

    பெற்றோரின் கவலை

    இதில் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலை குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வது, அவர்களை எப்படி பிஸியாக வைத்துக்கொள்வது என்பது தான். இப்போதுள்ள குழந்தைகள் டிவி, செல்போன்களில் தான் மூழ்கி கிடக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன்கூட அவர்களை விளையாட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

    கவலைக்கு தீர்வு

    கவலைக்கு தீர்வு

    பெற்றோர்களின் இந்த கவலைக்கு அருமையான தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைக் சேர்ந்த இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி. கராத்தே சாம்பியன்களான அக்குழந்தைகள் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்தவர்கள். அது மட்டுமல்லாமல் கராத்தேவில் 200க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளனர். சிறு வயதில் உலக சாதனை படைத்த முதல் இரட்டையரும் கூட.

    கராத்தே பயிற்சி

    கராத்தே பயிற்சி

    மற்ற குழந்தைகளை போலவே ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் தங்களுக்கு தெரிந்த கராத்தே கலையை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுத்தரும் வகையில், கராத்தே பயிற்சி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். சுலபமாக கராத்தே, சிலம்பம், நுங்சாக் உள்ளிட்ட பல தற்காப்பு கலைகளை செய்து காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    வீட்டுக்குள் உடலுழைப்பு

    வீட்டுக்குள் உடலுழைப்பு

    அவர்கள் செய்வதை பார்த்து, நம் பிள்ளைகளுக்கும் நாமே எளிதாக கராத்தே கற்று தரலாம். கராத்தே பழவது நம் பிள்ளைகளுக்கு உடல் வலிமையை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் என்றால், செல்போன் மற்றும் டிவியில் இருந்து அவர்களை விடுவிக்கவும் முடியும். மேலும் வீட்டுக்குள்ளேயே அவர்களுக்கு உடல் உழைப்பையும் தர முடியும்.

    English summary
    Srivishakan and Srihani a Karaikal, Pudhuchery based twins who are class five students, helps other kids to learn Karate through whatsapp videos
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X