காவி அணியில் கதர்.. பாஜக அரசுக்கு நன்றி! தமிழக அரசுக்கு அதிகாரமில்ல! ஏழுவர் விடுதலை பற்றி நாராயணசாமி
புதுச்சேரி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி தான் முதல் குற்றவாளி என்றும், தங்களது கோரிக்கையை ஏற்று நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியதை செலுத்தினர்.

மறு சீராய்வு மனு
இது சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. இந்த விடுதலையை எதிர்த்து எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசுக்கு அதிகாரமில்லை
இதற்கு மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் இலங்கையை சேர்ந்தவர்களை விடுதலை செய்ய சொல்ல அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

மறு சீராய்வு மனு
தேவைப்படும் பட்சத்தில் மறு சீராய்வு மனுவில் காங்கிரஸ் கட்சியும் தங்களை இணைத்துக் கொள்ளும் என்று தெரிவித்தார். மேலும் ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்கள் விடுதலையானதை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகிறார்கள். இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிரானது
பல்வேறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 40 ஆண்டு காலம் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள் ஆனால் 30 ஆண்டு காலம் இவர்கள் இருந்தார்கள் என்பதற்காக விடுதலை செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது." என்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது உலகையே உலுக்கியது.

தீர்மானம்
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதான 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6 பேர் விடுதலை
ஆனால் தமிழக ஆளுநர் அதை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை விடுதலை செய்திடுமாறு நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications