என்னது ’பேக்கு’வரத்து அமைச்சரா? கூட்டணி கட்சி அமைச்சர் என்றும் பாராமல்.. பாஜக புள்ளி சர்ச்சை ட்விட்!
புதுச்சேரி : புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில், 'பேக்குவரத்து' தமிழ்நாட்டில் வைக்கப்பட்டது என நினைத்துக் கொண்டு அதனை ட்விட்டரில் பகிர்ந்ததோடு 'மக்கு' என பாஜக நிர்வாகி ஒருவர் விமர்சித்ததாக என் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
திமுக ஆறு இடங்களிலும் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் சுயேச்சை யாகப் போட்டியிட்ட ஆறு பேர் வெற்றி பெற்றனர் இவர்களில் மூன்று பேர் பாஜகவுக்கு ஆதரவளித்தனர்.

புதுச்சேரி பாஜக
நியமன எம்எல்ஏக்களாக மூன்று பேரை மத்திய பாஜக அரசு நியமித்த நிலையில் பாஜகவின் எம்எல்ஏக்கள் பலமானது 12ஆக அதிகரித்தது இதை அடுத்து புதுச்சேரியில் கூட்டணி அரசு அமைந்தது முதல்வராக ரங்கசாமியும், நமச்சிவாயம் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் புதுச்சேரியில் தேஜ கூட்டணி அரசு தனது ஓராண்டினை நிறைவு செய்த நிலையில், பாஜகவுக்கு துணை முதல்வர், வாரியத் தலைவர் பதவிகளை வழங்க வேண்டுமென ரங்கசாமிக்கு பாஜக நெருக்கடி கொடுத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

முதல்வர் ரங்கசாமி
முதல்வராக ரங்கசாமிக்கும் ஆளுநர் தமிழிசை மூலம் பல்வேறு நெருக்கடிகளை பாஜக கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் ஆளுநர் தமிழிசை சூப்பர் முதல்வராக செயல்படுவதாக நிர்வாக ரீதியாக பல நெருக்கடிகள் தருவதாகக் கூறப்படுகிறது. என்ஆர் காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரங்கசாமிக்கு, பாஜக மேலிடம் மறைமுக நெருக்கடிகளை கொடுத்து பதவிகளை கேட்டு வருவது புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

பாஜக நிர்வாகி சர்ச்சை
கடந்த சில நாட்களாகவே பாஜகவுக்கும் என்ன காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணியில் சுமூகமான உறவு இல்லை என கூறப்படும் நிலையில் பாஜக நிர்வாகி ஒருவரின் ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் கூட்டணிக்குள் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். அதில் ஒரு போஸ்டரில் போக்குவரத்து துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக பேக்குவரத்து அமைச்சரே என குறிப்பிடப்பட்டிருந்தது.

தொண்டர்கள் கண்டனம்
இதனை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்த நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர் புதுச்சேரி அமைச்சருக்காக ஒட்டப்பட்டு இருந்த நிலையில் அது தமிழ்நாட்டில் நடந்தது என நினைத்துக் கொண்ட பாஜகவை சேர்ந்த ctr நிர்மல் குமார் என்பவர், திமுகவை விமர்சிப்பதாக நினைத்து 'மக்கு' என விமர்சித்து அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.பின்னர் தான் தெரிந்தது அது புதுச்சேரி பாஜக கூட்டணி கட்சி அமைச்சரின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டது என்று. ஆனாலும் அவர் அந்த ட்விட்டை நீக்கவில்லை. இதனால் கொதிப்படைந்துள்ள புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அந்த நிர்வாகியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications