பதிவுத்துறை சேவைகளை இணையம் வழியாக பெறும் ஸ்டார் 3.0 திட்டம்.. விராலிமலையில் விழிப்புணர்வு முகாம்
புதுக்கோட்டை: பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு உள்பட 18 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த பதிவுத்துறை சேவைகளை இணையம் வழியாக எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த முகாமிற்கு திருச்சி மண்டல பதிவுத்துறை துணை தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட பதிவு தலைவர் சுசீலா (தணிக்கை), புதுக்கோட்டை சார் - பதிவாளர் அறிவழகன் (நிர்வாகம்) சார்பதிவாளர் திருமதி அபிராமி ஆகியோர் கலந்து கொண்டார். தமிழகத்தில் பதிவுத்துறை சேவைகளை எளிமைப்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

பதிவுத்துறை ஸ்டார் 3.0 திட்டம்
பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் போன்ற 18 வகையான சேவைகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
"TNREGINET" என்ற கைபேசி செயலி வழியாக வில்லங்கச் சான்று, ஆவணப் பதிவுக்கான முன்பதிவு வில்லை (Token) நிலை, வழிகாட்டி மதிப்பு, திருமணம், சங்கம், கூட்டு நிறுவனம், சீட்டு நிறுவனம், ஆவணப்பதிவு விபரம், சொத்தின் மதிப்பு கணக்கீடு ஆகியவற்றை எளிதாக அறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத் துறையின் வெவ்வேறு சேவைகளின் நிலை தொடர்பாக புலனம் (WhatsApp) வழியாகவும் செய்தி அனுப்பும் வசதியும் இந்த ஸ்டார் 3.0 திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த ஸ்டார் 3.0 மென்பொருள் அறிமுகம் செய்யபப்ட்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு முகாமில் பத்திர பதிவுத் துறை சேவைகள் இடைத்தரகர்கள் இன்றி மக்களே எப்படி நேரடியாக பெற முடியும் என்பது பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. அந்தவகையில், பதிவுத் துறை சேவைகளை இணையம் வழியாக எவ்வாறு பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,பொதுமக்கள், வங்கி அலுவலர்கள், வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் இந்த நிகழ்ச்சியின் போது பத்திர பதிவுத்துறை சேவைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தரப்பட்டது. tnreginet.gov.in, http://tnreginet.gov.in/என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் பொதுமக்கள் நேரடியாகப் பெறுவது குறித்து விளக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு கையேடு
விராலிமலையில் பதிவுத்துறை அலுவலகத்தில் இணையம் வழி சேவை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு திருச்சி மண்டல பதிவுத்துறை துணை தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட பதிவு தலைவர் சுசீலா (தணிக்கை), புதுக்கோட்டை சார்-பதிவாளர் அறிவழகன் (நிர்வாகம்) சார்பதிவாளர் திருமதி அபிராமி ஆகியோர் கலந்து கொண்டார். ஸ்டார் 3.0 விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு கையேட்டினையும் திருச்சி மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் திருமதி சத்யப் பிரியா வழங்கினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications