Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினர் சாலை மறியல்.. அமைச்சர் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் திமுக- போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு தடியடி நிகழ்த்தப்பட்டது. இதில் திமுகவினர் சிலர் காயமடைந்ததால் போலீஸாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் கடந்த 19 ஆம் தேதி 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இன்று நகர்மன்றம், பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளையும் 6 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது.

 கவுன்சிலர்கள்

கவுன்சிலர்கள்

இந்த நிலையில் அந்த பேரூராட்சிக்குள்பட்ட கவுன்சிலர்கள் கடத்தப்படலாம் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு கொடுத்திருந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தையும் நாடி பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தனர். நீதிமன்றமும் அதிமுக கவுன்சிலர்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை அடுத்து 2ஆம் தேதி 30 வாகனங்கள் அணிவகுக்க போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அவர்களது இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படடனர். இந்த நிலையில் இன்று பேரூராட்சி தலைவர் தேர்தல் நடந்து வரும் போது ஆளும் கட்சியினரால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மீண்டும் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அதிமுக கவுன்சிலர்கள் நாடினர். இதையடுத்து இதற்கான உத்தரவையும் பெற்றனர்.

500 போலீஸார் குவிப்பு

500 போலீஸார் குவிப்பு

இன்று காலை 6.30 மணிக்கு அதிமுக சார்பில் கவுன்சிலர்கள் பேரூராட்சி வளாகத்திற்குள் வந்து விட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் தற்போது பேரூராட்சி முன்பாக திமுக - அதிமுக திரண்டதால் பதற்றம் நீடித்தது. திமுகவினர் போலீஸாரின் தடுப்புகளை தள்ளிக் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றதால் இதை தடுக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் திமுகவினர் சிலர் தாக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அன்னவாசலில் சாலை மறியல் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை சந்திக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வருகை தந்துள்ளார். தடியடி நடத்திய காவல்துறை மீது முதல்வரிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+