நம்பி வீட்டுக்குள் விட்ட பெற்றோர்.. டான்ஸ்மாஸ்டர் செய்த கொடூர செயல்.. கர்ப்பமான 15 வயது மாணவி..!
சேலம் : சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே 10ம் வகுப்பு ஆண்டு விழாவில் நடனம் சொல்லிக் கொடுத்த போது பாலியல் பலாத்காரம் செய்து மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள நைனாம்பட்டி பழையபேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, இடைப்பாடி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு வெள்ளாண்டிவலசு காந்திநகரை சேர்ந்த சரவணன்24 என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அத்துமீறிய டான்ஸ்மாஸ்டர்
இவர், கடந்த 2 ஆண்டுக்கு முன் மாணவி படித்து வரும் பள்ளியில் ஆண்டு விழாவிற்காக அவருக்குடான்ஸ் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த பழக்கத்தில், மாணவியின் வீட்டிற்கு வந்து, அவரது பெற்றோரிடமும் பழகியுள்ளார். அவர்களும், தனது மகளுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த மாஸ்டர் என பேசி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் படுத்து தூங்கிய மாணவி, திடீரென மாயமானார். காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது, மகளை காணாது அதிர்ச்சியடைந்தனர்.

மாணவி மாயம்
பின்னர், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். இதையடுத்து , தங்களது வீட்டிற்கு அடிக்கடிவந்து சென்ற டான்ஸ் மாஸ்டர் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். இதனிடையே மாயமான மாணவியுடன், சரவணன் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது, தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதால், அவரை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு பழநிக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்ப்பமான சிறுமி
மாணவிக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதால், இவ்வழக்கு பற்றி விசாரிக்க சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரலேகா விசாரணை நடத்தினார். அதில், பள்ளி ஆண்டு விழாவில் நடனம் கற்றுக்கொடுக்கும் போது நெருங்கிப்பழகி, வீடு வரை வந்து அவரி டம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால், சிறுமி கர்ப்பமடைந்ததும், அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி வெளியில் கடத்திச் சென்றதும் தெரிந்தது.

போக்சோவில் கைது
இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், மாணவியை கர்ப்பமாக்கிய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, சேலம் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications