அன்புமணி மாமாவே! முகுந்தனை விடுங்க! 2004-ல் உங்களுக்கு அனுபவம் இருந்ததா? ராமதாஸ் பேரன் சுகுந்தன்
சேலம்: என் தம்பி முகுந்தனுக்கு அனுபவம் இல்லைன்னு சொல்லும் மாமா அன்புமணியே, 2004 ஆம் ஆண்டு நீங்கள் கட்சியில் சேர்ந்த போது என்ன நடந்தது என்ற பிளாஷ்பேக்கை பார்க்கலாமா என பாமக நிறுவனர் ராமதாஸின் பேரனும் காந்திமதியின் மகனுமான சுகுந்தன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணியின் மருமகனும் பாமக நிர்வாகக் குழு உறுப்பினருமான சுகுந்தன் கூறியிருப்பதாவது: கேப்டன் விஜயகாந்த் படத்தில் ஒரு டயலாக் வரும், எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு! ஆனால் எனக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த்தை நன்றியுணர்வு!
நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம், சுயநலத்திற்கோ , கொள்ளையடிக்கவோ பதவிக்காகவோ வரவில்லை. ராமதாஸின் மீதுள்ள மரியாதைக்காக வந்திருக்கிறோம்.
அரசியல் ஆசை இல்லை
எனக்கு அரசியல் ஆசை இல்லை, அதனால்தான் கரை வேட்டி கட்டாமல் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வந்துள்ளேன். நமக்கும் இந்த மேடைக்கும் சம்பந்தமே வேண்டாம் என சொல்லிவிட்டு தொழிலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இளைஞரணி தலைவர்
நான் இப்போது எதற்கு வந்திருக்கிறேன் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு வருஷத்திற்கு முன்னாடி, என் தம்பி முகுந்தனுக்கு ஐயா ஒரு பதவி கொடுத்தார், இளைஞரணி தலைவர் பதவி! அதை ஒருத்தர் (அன்புமணி) மேடையில் எதிர்க்கிறார். "அவனுக்கு (முகுந்தன்) அனுபவம் பத்தாது, கட்சியில் சேர்ந்து 4 மாசம்தான் ஆகுது"னு கால் மேல கால போட்டுகிட்டு சொல்லி மைக்கை தூக்கி அடித்தார். இதையெல்லாம் நம் ஐயாவை வைத்துக் கொண்டு செய்யலாமா? இதெல்லாம் எத்தனை கேவலம் தெரியுமா? எதிர்க்கட்சிக்காரர் கூட இப்படி செய்ய மாட்டார்.
2004 ஆம் ஆண்டு நடந்தது என்ன?
என் மாமாவுக்கு (அன்புமணி) ஒரு கேள்வி, நாம் ஒரு பிளாஷ் பேக்கிற்குள் செல்லலாமா? அன்புமணி கட்சியில் சேர்ந்தது 2004 இல்! அதே ஆண்டில் அன்புமணி இளைஞரணி தலைவரானார், மாநிலங்களவை உறுப்பினரானார், மத்திய அமைச்சரும் ஆனார்.
அமைச்சரான அன்புமணி
இவர் கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் மத்திய அமைச்சராகலாம். ஆனால் என் தம்பி உழைத்து மேலே வந்தால் இப்படித்தான் அனுபவம் இல்லை என்பதா? உங்களுக்கு வந்தால் ரத்தம், மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
ஔரங்கசீப் டூ அன்புமணி
வரலாற்றில் அப்பாவை எதிர்த்தவர்களில் ஔரங்கசீப்பில் இருந்து நம் அன்புமணி வரை பலர் இருக்கிறார்கள். ஔரங்கசீப், தனது தந்தை ஷாஜஹானை பதவி வெறிக்காக சிறையில் அடைக்கிறார். ஒரு சிறிய அறையில் இருந்தபடியே அவர் தான் கட்டிய தாஜ்மகாலை ரசித்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உயிரை விட்டுவிடுகிறார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பதவி வெறி கண்ணை மறித்தால் பெற்ற தகப்பன் கூட எதிரியாகவே தெரிவார்.
தாத்தாவை பிடிக்கும்
எனக்கு என் தாத்தாவை மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு ஹீரோ. இந்தியாவில் நிறைய பேர் அரசியல் கட்சிகளை தொடங்குகிறார்கள். எதற்காக என்றால், முதல்வராகணும், எம்எல்ஏவாகணும் மந்திரியாகணும்னு! ஆனால் ஐயாவோ என் மாமாவை எம்எல்ஏவாக்கினார், எம்பியாக்கினார், மத்திய அமைச்சராக்கினார், ஆனால் என் தாத்தா (ராமதாஸ்) எந்த பதவியிலும் உட்காரவில்லை.
வேலைவாய்ப்பு
என் மக்கள் நன்றாக இருக்க வேண்டும். என் வன்னிய இனம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் நல்லதொரு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட ஒரே தலைவர் நம் ஐயா. இங்கு இருக்கும் இளைஞர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஐயா, நாங்களும் தமிழக மக்களும் உங்களுடன் இருக்கிறோம். 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு தெரியும், யார் ரியல் ஹீரோ, யார் ஜீரோன்னு! களம் நமதே வெற்றி நமதே! இவ்வாறு சுகுந்தன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications