பிரதமர் மோடி போட்டோ கூட வைக்க மாட்றாங்களே! ரொம்ப மோசம்! புகார் பட்டியலை நீட்டிய பாஜக அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

சேலம் : மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்த விடவில்லை எனவும், அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்கப்படுவதில்லை என சேலத்தில் மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய ஜல் சக்தி துறை மற்றும் பழங்குடியின் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு வந்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கூறும் போது மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து வருகிறது ஆனால் இந்த திட்டங்களையும் நிதியையும் தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை

பிஸ்வேஸ்வர் டுடு

பிஸ்வேஸ்வர் டுடு

மக்கள் நலனுக்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்தாலும் அதை தமிழக அரசு மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை.மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தங்கள் அரசு செய்து கொண்டது போல மத்திய அரசு நிதியை மற்ற பணிகளுக்கு செலவிடுகிறது. தமிழக முழுவதும் 53 சதவீதம் மட்டுமே வீடுகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இலக்கு நிர்ணயம்

இலக்கு நிர்ணயம்

2022க்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்தும் இந்த இலக்கு முடிக்கப்படாததால் இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா முழுவதும் 700 சிறப்பு பள்ளிகள் துவக்கப்பட உள்ளது. இதில் எட்டு பள்ளிகள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு பள்ளிகளின் பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கியுள்ளது. இரண்டு பள்ளிகளின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீதம் உள்ள நான்கு பள்ளிகளுக்கான வேலை இன்னும் துவக்கப்படவில்லை

 ஜல் ஜீவன் திட்டம்

ஜல் ஜீவன் திட்டம்

மத்திய அரசின் பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசு பங்களிப்பு இல்லாததால் மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியை திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நிதியை பெற்று தங்கள் பங்களிப்போடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஜல்சக்தி திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு ஆவணங்கள் கேட்பதாக புகார் எழுந்தது. ஆனால் மின்சார இணைப்புக்கான ஆவணங்கள் இருந்தாலும் கூட அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் மற்றும் பாரத பிரதமர் படம் இருக்க வேண்டும் ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில் கலைஞர் கருணாநிதி படமும் தமிழக முதலமைச்சர் படம் மட்டுமே உள்ளது பாரத பிரதமர் படம் வைக்காதது துரதிஷ்டவசமானது. பொதுவாக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு செயல்பாடு திருப்திகரமாக இல்லை" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+