சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து... அறைகள் தரைமட்டம் - 4 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இரண்டு அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு நிகழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியலில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 4 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து என தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்துள்ள வருவாய் துறை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், வழிவிடு முருகன் என்பவரது பட்டாசு ஆலையில் அதிகளவு ஃபேன்சி ரக பட்டாசு தயாரிக்க மருந்து தயார் செய்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறினர். இந்த பட்டாசு ஆலை வழிவிடு முருகன் என்பவர் மூலம் நடத்தப்படுகிறதா, அல்லது வேறு சில ஒப்பந்தகாரர் மூலம் நடத்தப்படுகிறதா என விசாரணை நடைபெறுகிறது. முழு விசாரணைக்கு பின்பு தான் எத்தனை நபர் இறந்துள்ளனர். எத்தனை நபர்களுக்கு காயம் என தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.
ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications