பவுலர்களுக்காக அறிமுகமான 4 புதிய விதிகள்.. ஐபிஎல் தொடருக்கு முன் கொண்டு வந்த பிசிசிஐ.. நோட் பண்ணுங்க
மும்பை: ஐபிஎல் தொடருக்கு முன்பாக 4 புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் 4 விதிகள் பவுலர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த சீசனில் பேட்ஸ்மேன்கள் - பவுலர்களுக்கு இடையில் சரிக்கு சமமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதிகளை குறித்து பார்க்கலாம்.
18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. மழை காரணமாக போட்டி நடக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும், குறைந்தது 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த ஐபிஎல் நிர்வாகம் தயாராகி வருகிறது.

இதனிடையே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 4 புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா பரவலின் போது பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்க வேண்டும் என்று ஐபிஎல் தொடரில் ஆடி வரும் 10 அணிகளின் நிர்வாகங்களும் கோரிக்கை வைத்தன.
இதனைத் தொடர்ந்து உடனடியாக ஐபிஎல் தொடருக்கு முன்பாக தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பனிப்பொழிவு காரணமாக பந்து அதிகம் சேதமடைந்தால், அதேபோன்ற வேறு ஒரு பந்தை மாற்றிக் கொள்ள விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 ஓவர்களுக்கு பின் தேவைப்பட்டால், கேப்டன்கள் கள நடுவர்களிடம் முறையிடலாம்.
கேப்டன்கள் முறையிட்டால், நடுவர்கள் நிச்சயமாக பந்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். ஆனால் பவுலிங் அணி எந்த பந்து வேண்டும் என்பதை தேர்வு செய்ய உரிமை கிடையாது. ஏனென்றால் நடுவர்கள் செமி பந்தினை மட்டுமே கொடுப்பார்கள். அதேபோல் டிஆர்எஸ் முறையீடு இனி உயரத்தின் அடிப்படையிலான ஒய்டு மற்றும் நோ-பாலுக்கும் செய்யலாம்.
இதற்கு டெக்னாலஜி உதவியுடன் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி பவுலிங் செய்வதற்கு தாமதம் ஏற்பட்டால், டி மெரிட் புள்ளிகள் கொடுக்கப்படும். இதற்கு முன்பாக 3 போட்டிகளில் பவுலிங் செய்ய தாமதம் ஏற்பட்டால், அந்த அணியின் கேப்டன் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று விதிகள் இருந்தது. அதனை மாற்றி இருக்கின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications