For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டு பயமில்லை: ராஜபக்சே திமிர் பேச்சு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொழும்பு: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதி கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும், ஜ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.

Human rights resolution: We have nothing to fear, Mahinda Rajapaksa says

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜபக்சே கூறியுள்ளதாவது:

''நாங்கள் இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறோம். இந்த தீர்மானம் நாங்கள் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை காயப்படுத்த மட்டுமே செய்கிறது. வேறெந்த வகையிலும் உதவப்போவதில்லை.

தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு சோர்ந்து போகவில்லை என குறிப்பிட்டுள்ள அதிபர் ராஜபக்சே,ஏற்கனவே, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளை, சர்வதேச விசாரணை பாதிக்கும். ஆனாலும் நாங்கள் ஏற்கனவே தொடர்ந்த நல்லிணக்க நடைமுறைகளை மீண்டும் தொடர்வோம். இந்த தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு நான் பயப்படமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

English summary
Sri Lankan President Mahinda Rajapaksa has said he has nothing to fear as his country faces a US-passed human rights resolution at the UN rights body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X