இலங்கை அதிபர் ஏகேடி வீடா இது? நேரடி விசிட் அடித்த தமிழர்! எளிமையாக வாழும் உறவினர்கள்
இலங்கை: புதிய ஜனாதிபதி ஏகேடியின் பூர்வீக கிராமமான வட மத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள தம்புதேகம கிராமத்திற்கு ஒரு தமிழ் யூடியூபர் நேரடியாகச் சென்று திரும்பியது சமூகவலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
உலக நாடுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இலங்கை அதிபராக ஏகேடி பதவியேற்றிருக்கிறார். இருதுருவ அரசியல் களத்திற்கு மட்டுமே பழகிப் போன இலங்கை மக்கள் இந்த முறை அனுர குமார திசாநாயக்கவை அதிபராகத் தேர்வு செய்து பெரிய மாற்றத்திற்கு விதைப் போட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடாக இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று அதிகாரத்திற்கு வந்துள்ளது. அதுவும் வலதுசாரி கருத்தாக்கம் கொண்ட இந்திய ஆட்சியாளருக்கு எதிர் துருவத்தில் உள்ள ஒரு கொள்கை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 3% வாக்குதான் பெற்றார். இந்த முறை அப்படியே நிலைமை தலைகீழாகி உள்ளது. இறுதிக்கட்ட வரை வாக்கு எண்ணிக்கையின் போது அனுர வெற்றி பெறுவாரா என்ற பதற்றம் நிலவியது. ஊகங்களை உடைத்து வெற்றிக் கொடியை அனுர குமார திசாநாயக்க நாட்டியுள்ளார். இவரது வெற்றி இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இலங்கையில் நடந்ததைப் போல வரும் காலங்களில் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வரலாம் என சமூக வலைத்தளங்களில் எழுதி மன ஆறுதல் பெற்றுவருகிறார்கள்.
பலரும் நினைப்பதைப்போல ஜெவிபி ஒன்றும் கம்யூனிஸ்ட் கட்சியல்ல. அதன் தொடக்கக் காலம் இடதுசாரி அரசியலைக் கொண்டு இருந்தது. 2000க்குப் பிறகு கட்சி சிங்கள பெளத்தவாத அடையாள அரசியலுக்குள் சென்றுவிட்டது. ஆகவேதான், இந்த வெற்றி அங்கே சாத்தியமாகி இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை சந்திரிக்கா பண்டாரநாயக்க தொடங்கி ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்க வரை அனைவரும் சிங்கள இனவாத அடையாள அரசியலைத்தான் முன்வைத்து வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றபோது இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் ஒரு இணக்கம் இருந்தது இல்லை. ஆனால், ஏகேடி வெற்றிக்குப் பின் தமிழர்களிடம் ஒரு மன மாற்றம் நிலவுவதை உணரமுடிகிறது.

இந்நிலையில்தான் இலங்கையில் உள்ள தவக்கரன் என்ற யூடியூபர் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் சொந்த வீடு உள்ள தம்புத்தேகம பகுதிக்குச் சென்று நேரடி விசிட் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுதான் ஏகேடியின் சொந்த கிராமம். அங்கே இப்போது அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீடியோ ஒரே நாளில் 10 லட்சம் பேரைக் கடந்து வைரலாக வருகிறது. ஏகேடியின் இந்தக் கிராமத்தில் இப்போதுகூட மண் சாலைதான் உள்ளது. தார்ச்சாலை வசதிகூட போடப்படவில்லை. மரங்கள் சூழ்ந்த பசுமையாக உள்ளது கிராமம். இதைப் பற்றி தவக்கரன் பேசுகையில், "நான் இந்தக் கிராமத்திற்கு திடீரென்று திட்டமிடாமல் தற்செயலாக வந்தேன். இந்தப் பகுதியில் சின்ன அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பெரிய அளவில் பேனர்கள், விளம்பரப் பதாகைகள் இல்லை. மிகச் சாதாரண கிராமம் போல் காட்சி அளிக்கிறது. ஒரு அதிபரின் பூர்வீக கிராமம் போல் இல்லை.
இந்த ஊரில் உள்ள சில பைக்கில் செல்லும் இளைஞர்களை விசாரிக்கும்போது அதிபர் ஏகேடியின் வீடு எங்கே உள்ளது என்று தெரியாது என்றனர். அந்தளவுக்கு இன்னும் ஊர்மக்களே அவர் பூர்வீக கிராமத்தைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை" என்கிறார். இவர் அந்தக் கிராமத்தில் நடமாடும் மக்களை விசாரித்து எப்படியோ ஒருவழியாக ஏகேடி வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கே அவரது தாய் மற்றும் உறவினர்கள் உள்ளனர். ஒரு உறவினர் ஏகேடி வெற்றி பெற்றது மிக சந்தோஷம் என்றும் இனிமே இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று சிங்களத்தில் கதைக்கிறார். மேலும் அங்கு உள்ள உறவினர்களை அழைத்து அறிமுகம் செய்து வைக்கிறார்.

ஏகேடியின் கிராமத்து வீட்டில் முகப்பில் மட்டும் ஒரு கேட் உள்ளது. அதில் உள்ள இரண்டு தூண்களில் சின்ன சுவரொட்டியைக் காண முடிகிறது. மற்றபடி இந்த வீட்டுக்குச் சுற்றுச் சுவரோ வேலியோ எதுவுமே இல்லை. இங்கே உள்ள அனைத்து கிராமத்து வீடுகளும் இதைப்போல வேலி போடாத வீடுகளாகவே உள்ளன. அதைப்பார்த்து நம்மைப் போலவே ஆச்சரியப்படுகிறார் தவக்கரன். இங்கே வாழ்ந்துவரும் ஏகேடியின் தங்கை மிக எளிமையாக இருக்கிறார். அவரது குழந்தைகள் ஜனாதிபதியின் தங்கை மகள்கள் எனச் சொல்லமுடியாத அளவு காட்சி தருகின்றனர். அதில் ஒரு உறவினர், 'ஏகேடி இளம் வயதிலேயே வெரி குட் பாய்' என்கிறார். இந்தக் கிராமத்து வீட்டில் அந்தக் காலத்தில் நமது தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட்ட 'கலைஞர் டிவி' போல ஒரு சின்ன டிவிதான் இருக்கிறது. இந்த வீட்டில் ஏகேடியின் இளம் வயது புகைப்படங்கள் பல மாட்டி வைக்கப்பட்டுள்ளன. அவர் பிறந்த வீடு என்பதால் அதற்கான பல அரிய விசயங்கள் உள்ளன.
"நான் இந்த வீட்டு வாசலில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டு போய்விடலாம் என்ற நினைப்பில்தான் வந்தேன். ஆனால், ஏகேடியின் தங்கை உள்ளே அழைத்து க்ரீன் டீ மற்றும் பிஸ்கெட் கொடுத்து உபசரித்தார்கள். அதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. ஒரு தமிழனுக்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஊழல் இல்லாத ஒரு நாடு. சமத்துவமாக மக்கள் அனைத்து மக்களும் வாழும் நாடாக இலங்கை மாற வேண்டும். அதைத்தான் ஏகேடியின் உறவினர்கள் சொன்னார்கள். அதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது" என்று உணர்ச்சிப்பூர்வமாக சவக்கரன் பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஜனாதிபதி வீட்டில் இந்த யூடியூபர் இருந்துள்ளார். பேசி இருக்கிறார். அங்கே 2 காவல் அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் இவரைக் கண்டு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அவ்வளவு இயல்பாக இருக்கிறது ஏகேடி வீடு. இந்த மாற்றம் இலங்கையில் உருவாகி உள்ள நல்ல மாற்றம் என்கிறார் தவக்கரன்.
ஏகேடி 1968ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி இலங்கை வடமத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். இவரது அப்பா ஒரு கூலித்தொழிலாளி. அம்மா இல்லத்தரசி. மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஏகேடி. இங்குள்ள தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயத்திலும் பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் தனது படிப்பை முடித்தார் ஏகேடி. அந்தப் பூர்வீக வீட்டுக்குத்தான் இந்த யூடியூபர் கொழும்பிலிருந்து பயணம் செய்து சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications