For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேபி, பாலகுமாரன் உட்பட சரணடைந்த 353 விடுதலைப் புலிகள், பொதுமக்கள் காணவில்லை- சர்வதேச அமைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன் உட்பட 351 விடுதலைப் புலிகள் குடும்பத்துடன் காணவில்லை என ஐடிஜேபிஎஸ்எல் என்கிற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் இணையதளத்தில், மே 2009 இல் போரின் இறுதி நாட்களின் போது இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்து காணாமல்போனவர்களின் விபரங்களை நாங்கள் முதலில் பட்டியலிட்டு வருகின்றோம்.

ITJP releases 353 Disappearances in SriLanka

மேலதிக தகவல்களை /திருத்தங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தயவுசெய்து அனுப்பி வைக்கவும் என்கிற கோரிக்கையுடன் காணாமல் போன 353 பேர் விவரங்கள், அவர்கள் சரணடைந்த இடம், சரணடைந்ததைப் பார்த்த சாட்சி என முழுமையான விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

இதில், விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழக அரசியல் தலைவர்கள் நன்கு அறிந்த பேபி சுப்பிரமணியமும் ஒருவர். பேபி சுப்பிரமணியம், அவரது மனைவி ரட்ணா, மகள் அறிவுமதி, மற்றொரு மூத்த தலைவர் பாலகுமாரன், அவரது மகன் சூரிய தீபன், பாதுகாவலர்கள், புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த இளம்பரிதி, அவரது மனைவி சிவாஜினி, மகன் தமிழ் ஒளி, மகள்கள் எழிழினி, மகிழினி உள்ளிட்டோர் விவரங்கள் படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

படங்கள்:

இலங்கை ராணுவ காவலில் பாலகுமாரன், மகன், பாதுகாவலர்கள்

ITJP releases 353 Disappearances in SriLanka

தமிழீழ அரசியல்துறையைச் சேர்ந்த இளம்பரிதி குடும்பத்துடன்...

ITJP releases 353 Disappearances in SriLanka
English summary
ITJP released the 353 Disappearances during the last war in Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X