For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் தேர்தலின் போது மாயமான ஆசிரியரின் அழுகிய பிணம் கண்டெடுப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வவுனியா: இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற காணாமல் போன ஆசிரியர் கார்த்திகேசன் நிருபனுடைய சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 38 தொகுதிகளை கொண்ட வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது.

இந்த தேர்தலின் போது, 19-09-2013 முதல் வவுனியா பகுதியை சேர்ந்த அறிவியல் ஆசிரியர் கார்த்திகேசன் நிருபன் என்பவர் திடீரென்று காணாமல் போனார். கடந்த 6 மாத காலமாக அவரைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்காமல் உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மண்குளம் பகுதியில் ஒரு தோட்டத்தை தோண்டிக்கொண்டிருந்த கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் அழுகிய நிலையில் ஒரு சடலம் இருப்பதைக் கண்டனர்.

அந்த தோண்டியெடுத்து, மிச்சம் மீதி ஒட்டியிருந்த ஆடைகளை வைத்து ஆய்வு செய்ததில் கைப்பற்றப்பட்ட சடலம் தேர்தலின்போது காணாமல் போன ஆசிரியர் கார்த்திகேசன் நிருபனுடையதுதான் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் எப்படி? எதற்காக கொல்லப்பட்டார்? என்பது தொடர்பாக வவுனியா மக்களிடையே தற்போது பல்வேறு விதமான கருத்துக்கள் உலவி வருகின்றன. காணாமல் போன ஆசிரியர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Sources in the Wanni told the JDS via phone that the badly decomposed skeletal remains with bits of clothing was found by a group of local people while clearing a garden near 225/226 KM post in Mankulam on Wednesday. "Ms Sivakaran Nishthika, the sister of Karthikesan Niruban on Thursday has identified the remains to be that of her missing brother," the sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X