For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் செப்.30-ல் இலங்கை தொடர்பான அறிக்கை தாக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

இலங்கை: இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் வரும் 30-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை மனித உரிமைகள் விசாரணைக்கான ஐ.நா. தூதரக அலுவலகம் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.

Sri Lanka Report on Sept. 30 at UNHRC

கடந்த மார்ச் 2014-ல் மனித உரிமைகள் ஆணைய தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை தயார்செய்யப் பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகூட்டம் வரும் 14-ந் தேதி தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெறும். இதில் வரும் 30-ந் இலங்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் நிஷா பிஸ்வால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A report on human rights violations in Sri Lanka during the Final War is likely to be presented on September 30 at the UNHRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X