• search
சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நண்பேன்டா'.. வேறு குரூப்புடன் சென்ற பென்குயின்.. தலையில் தட்டி.. திருப்பி கூட்டி வந்த 'பெஸ்ட்டீ'

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பென்குயின்கள் நடத்திய மீட்டிங்கில் அரங்கேறிய க்யூட் மொண்ட் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விலங்குகளின் உலகம் என்பதே அலாதியானது தான். தொலைக்காட்சி, செல்போன்கள் போன்ற தொழில்நுட்ப வசதிகள் வருவதற்கு முன்பு, விலங்குகள் என்றால் அவை வேட்டையாடும், இரை தேடும், இனப்பெருக்கம் செய்யும் என்ற பொதுவான பார்வைதான் அனைவருக்கும் இருந்தது.

ஆனால், டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரெஃபி போன்ற சேனல்கள் வந்த பிறகுதான் மிருகங்களின் வாழ்க்கை முறை ஓரளவுக்கு நமக்கு தெரியவந்தது. மனிதர்களை போலவே நட்பு, பகை, காதல், துரோகம் என அனைத்தும் அவற்றுக்கும் இருக்கின்றன என்ற புரிதல் நமக்கு உருவானது.

தூக்கான் பறவைகளுக்கு மத்தியில் ஒரு பென்குயின் இருக்கு.. 13 செகண்டில் கண்டுபிடித்தா நீங்க ஜீனியஸ்! தூக்கான் பறவைகளுக்கு மத்தியில் ஒரு பென்குயின் இருக்கு.. 13 செகண்டில் கண்டுபிடித்தா நீங்க ஜீனியஸ்!

ஆச்சரியப்படுத்தும் விலங்குகள்..

ஆச்சரியப்படுத்தும் விலங்குகள்..

அதுவும், ஸ்மார்ட்ஃபோன்கள் வந்த பிறகு, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்கள் குறித்த வீடியோக்களும், நம் கண் முன்னே வந்துவிடுகின்றன. அவற்றில் பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த தவறுவதில்லை. உண்மையில், இந்த வீடியோக்களை பார்க்காமல் செவிவழி செய்தியாக மட்டும் கேட்டிருந்தால், அவற்றை நாம் நம்புவது கடினம் என சொல்லும் அளவுக்கு சில விலங்குகளின் செயல்பாடுகள் இருக்கும். உதாரணமாக, மான் குட்டியை வேட்டையாட சென்ற பெண் சிங்கம் திடீரென மனம் மாறி அதனை பேணி வளர்ப்பது; தன் தந்தையை கொன்ற கழுதைப் புலிகளை சிங்கம் ஒன்று தேடிச் சென்று பழிவாங்குவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் இருக்கின்றன.

பென்குயின் வீடியோ

பென்குயின் வீடியோ


அப்படியொரு வித்தியாசமான வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்டி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பென்குயின்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த பென்குயின்களை பார்ப்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இரண்டு கால்களால் மனிதர்களை போல அவை நடப்பதே தனி அழகுதான்.

 சீரியஸ் மீட்டிங்..

சீரியஸ் மீட்டிங்..

அந்த வகையில், அங்கு இரண்டு வெவ்வேறு பெயின்குயின் கூட்டங்கள் எதிரெதிர் திசையில் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. பின்னர் அருகருகே வந்ததும் ஏதோ ஒரு விஷயம் குறித்து அவை சீரியஸாக சில நொடிகள் ஆலோசனை செய்கின்றன. அதன் பின்னர், 'பிளான் டன்' என்பதை போல அவை மீட்டிங்களை முடித்துக் கொண்டு ராணுவத்தினர் அணிவகுத்து செல்வதை போல நடந்து செல்கின்றன.

தலையில் தட்டி..

தலையில் தட்டி..

அப்போது ஒரு கூட்டத்தில் இருந்த பென்குயின், ஞாபக மறதியில் திடீரென வேறு பென்குயின் அணிக்கு இடம் மாறி சென்றது. அப்போது அதன் நண்பன் பென்குயின், விறுவிறுவென அங்கு சென்று அணி மாறிச் சென்ற பென்குயினை, "ஏ.. எங்க போற.." என்ற தொனியில் தலையில் தட்டி தன்னுடன் அழைத்து சென்றது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி நெட்டிசன்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. பலரும் இந்த வீடியோவுக்கு கீழே நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

English summary
In a hilarious incident captured, one penguin brings back his friend who mix with another group in Australia. The video goes viral in Internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X