சென்னை திருவேற்காட்டில் இரட்டை கொலை... வளர்ப்பு மகனே கொன்ற கொடூரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திருவேற்காடு அருகே சொத்து தகராறில் தாயையும் , சித்தியையும் கொன்ற விவகாரத்தில் வளர்ப்பு மகன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவேற்காடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாயகி (75). இவரது தங்கை கிருஷ்ணவேணி (70) . இருவரும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர்.

2 were murdered in Tiruverkadu

ரங்கநாயகியின் வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன். இந்நிலையில் இன்று காலை இரு மூதாட்டிகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக திருவேற்காடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது சொத்துக்காக தனது தாயையும், சித்தியையும் வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணனே கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Youth murdered his mother and her sister for assets problem in Tiruverkadu, Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற