For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேட்லி - ஜெயலலிதா சந்திப்பில் சந்தேகம் இருக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: அருண் ஜேட்லி - ஜெயலலிதா சந்திப்பு சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது என்றும், அதற்கு விளக்கம் தேவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்திருப்பது நியாயமான சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.

A controversial doubt arrived by Jaya-Arun meet…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இப்படி ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட எவரும் இத்தனை விரைவாக ஜாமீன் பெற்றதில்லை என்கிற வெளிச்சத்திலும், அருண்ஜேட்லியை சந்தித்த பிறகு வருமான வரி வழக்கில் வரியை கட்டிவிட்டு தண்டனையின்றி வெளிவர முடிந்திருக்கிறது என்பதும், பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் என்பதை கணக்கில் கொண்டு பார்க்கிறபோது வெளித் தெரியாத உடன்பாட்டிற்காகவே அருண்ஜேட்லி ஜெயலலிதாவைச் சந்தித்திருக்கிறார் என்று பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தவறென்று கூற முடியாது.

தங்கள் அரசியல் லாபங்களுக்கான பரஸ்பர உதவிக்கான சந்திப்பே இது என்பதும் அதற்காக சட்டமும் நீதிமுறைகளையும் வளைக்கப்படலாம் என்பதும் மக்களின் நலனைப் பாதிக்கக் கூடியவை. திரு. அருண் ஜெட்லி இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இத்தகைய தவறான உள்நோக்கம் கொண்ட சந்திப்பு ஏற்கத் தக்கதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Marxist communist says that Arun jatly and Jayalalitha’s meet made a doubt and controversy about the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X