வேலூர் கோயில் தேர்களை தீவைத்து எரித்த நபர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன- வீடியோ

  வேலூர்: வேலூரில் கோயில் தேர்களை தீவைத்து எரித்த நபர் கைது செய்யப்பட்டார். தேருக்கு கீழ் அமர்ந்து குடிக்கக் கூடாது என்று கூறியதால் தீவைத்ததாக இளைஞர் தெரிவித்தார்.

  கடந்த சனிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட கடைகள் நாசமாகின.

  A man who sets fire on temple chariots arrested

  அதுபோல் நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயிலின் ஸ்தல விருட்சம் எரிந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

  இந்நிலையில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாரியம்மன், பொன்னியம்மன் கோயிலில் இருந்த 2 தேர்கள் நேற்று நள்ளிரவில் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

  அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கோயில் தேருக்கு தீவைத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கோயில் தேருக்கு கீழ் மதுகுடிக்கக் கூடாது என்று கோயில் நிர்வாகம் கூறியதால் ஆத்திரத்தில் தீ வைத்ததாக தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Man sets fire on Mariamman and Ponniyamman koil chariots for personal intention.Vellore police arrests.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற