ஜெ.வுக்காக திண்டுக்கல் மாரியம்மன் கோவிலில் எம்.பி உதயகுமார், எம்எல்ஏ பரமசிவம் சிறப்பு வழிபாடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் லோக்சபா எம்.பி. உதயகுமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவம் உள்ளிட்டோர் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினரும் பால்குடம் எடுத்தல், சிறப்பு பூஜைகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

ADMK MLA Paramasivam performs Pooja for Jayalalithaa's recovery

வேடசந்தூர் ஒன்றியத்தின் அம்மாபட்டியில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவம், அதிமுக நிர்வாகிகள் சுப்பிரமணியன், முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADMK MLA Paramasivam performs Pooja for Jayalalithaa's recovery

அதேபோல் பேகம்பூர் ஹஜ்ரத் அமிருன் நிஷா பேகம் ஷாகிபா தர்காவில் சிறப்பு (துஆ) பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. மாரம்பாடி அந்தோணியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

ADMK MLA Paramasivam performs Pooja for Jayalalithaa's recovery

இன்று திண்டுக்கல் மாவட்ட அதிமுக மருத்துவ அணி சார்பில் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் லோக்சபா எம்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. விபிபி பரமசிவம் உள்ள்ட்டோர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vedasandur Mla Dr VPB Paramasivam did special poojas at Dindigul Kottai Mariyamman Temple on Wednesday.
Please Wait while comments are loading...