For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக அரசு திருந்த வேண்டும்.. இல்லையென்றால் திருந்த வைப்பேன்.. டிராபிக் ராமசாமி அதிரடி!

அதிமுக அரசு திருந்த வேண்டும் இல்லையென்றால் திருந்த வைப்பேன் என்று டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசு திருந்த வேண்டும் இல்லையென்றால் திருந்த வைப்பேன் என்று டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக வைத்த அனைத்து பேனர்களையும் நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADMK should learn says Traffic Ramasamy on Banner case

சென்னையில் மிகவும் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடக்க உள்ளது. தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் இந்த விழா நடைபெறும். இதற்காக வைக்கப்பட்ட பேனர்கள்தான் தற்போது அகற்றப்பட உள்ளது.

[எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: படையெடுத்த அதிமுகவினர்.. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ]

மேலும் இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு தொடுத்த டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார்.

அதிமுக பேனர்களை அகற்றிவிட்டதாக ஹைகோர்ட்டில் கூறியது முழுக்க முழுக்க பொய். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் அது. நான் இன்று கூட பார்த்தேன். 8 மணிக்கு கூட பார்த்தேன். 700 பேனர் வரை இருக்கிறது.

காவல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். இதை அவர்கள் தட்டி கேட்கவில்லை. அதனால்தான் நீதிமன்றம் தற்போது தலையிட்டு முடிவெடுத்து இருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை.

பல முறை சொல்லிவிட்டேன். இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். இந்த கொள்ளைக்கார கூட்டத்திற்கு இது பெரிய பாடம். அவர்கள் எல்லாம் திருந்தினால் நல்லது, இல்லை என்றால் இந்த வழக்கு மூலமே அவர்களை திருந்த வைப்பேன் என்று கூறியுள்ளார்.

English summary
MGR Century Celebration: ADMK should learn says Traffic Ramasamy on Banner case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X