தாறுமாறான நெருக்கடி எதிரொலி.. தினகரன் குரூப்பை தூக்கி எறிந்தது அதிமுக அம்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் கோஷ்டி கொடுத்த நெருக்கடிக்கு பயந்து எடப்பாடி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி தலைமையிலான அரசு இன்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை கிரீன்வேஸ சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சசிகலா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது சசிகலா குடும்பத்தை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சசிகலா குடும்பத்தின தலையீடு ஆட்சியிலும் கட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

ஓபிஎஸுடன் பேசத் தயார்

ஓபிஎஸுடன் பேசத் தயார்

அடிமட்ட தொண்டர்களின் விருப்பப்படி ஆட்சி தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஓபிஎஸ் அணியினருடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சசி குடும்பத்துக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு

சசி குடும்பத்துக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு

கட்சியில் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதிபட கூறினார்.

நெருக்கடியில் தினகரன்

நெருக்கடியில் தினகரன்

ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனும விரைவில் கைதாவார் என தெரிகிறது. வருமனா வரித்துறையினர் ரெய்டில் அமைச்சர்களும் சிக்கியுள்ளனர். இந்த அடிமேல் அடி தினகரனுக்கு நெருக்கடியை அளித்தது.

ஓபிஎஸ் அணிக்கு பயந்து..

ஓபிஎஸ் அணிக்கு பயந்து..

இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் கொடுத்த நெருக்கடிக்கு பயந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக தெரிவித்துள்ளது. கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi palanisamy govt says that they are expelling Sasikala's family. After the crisis given by the OPS team Edappadi govt taken the decision.
Please Wait while comments are loading...