சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கிருஷ்ணா நதியில் 3.33 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆந்திரா முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.

Andhra government decided to release water in Krishna river to solve the water problem in Chennai

சென்னையின் குடிநீர் ஆதரங்களான, செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்த விட வேண்டும் என கடந்த மாதம் தமிழக நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ஆந்திர அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனை பரிசீலித்த ஆந்திர அரசு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிருஷ்ணா நதியிலிருந்து 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளருக்கு 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்த விட வேண்டும் என ஆந்திர மாநில நீர் வளத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து விரைவில் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Andhra Pradesh government has decided to release water in Krishna river to solve the water problem in Chennai. Andhra govt going to give 3.33 TMC water for Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X