அஸ்வின் விபத்தில் சிக்கியதை நம்பவே முடியவில்லை.. நண்பர்கள் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவரது நண்பர்கள் மிகுந்த அதிர்ச்சி வெளிப்படுத்தினர்.

Ashwin friends, can't believe the accident

அஸ்வின் நண்பர் ஒருவர் கூறுகையில், சிறப்பாக கார் ஓட்டுபவர் அஸ்வின். சாலையை பார்த்தாலே எப்படி காரை ஓட்ட வேண்டும் என தீர்மானித்துவிடுவார். அவர் விபத்தில் சிக்கியதை நம்ப முடியவில்லை. இரவு எனக்கு தொலைபேசியில் அஸ்வின் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்தது.

லேசான காயமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், அஸ்வினும் அவரின் மனைவியும், கருகி இறந்துவிட்டதாக அதிகாலை 3.30 மணிக்கு தகவல் கிடைத்ததும் மிகுந்த ஷாக் ஆகிவிட்டோம் என்றார்.

Ashwin friends, can't believe the accident

அஸ்வினின் தோழி ஒருவர் கூறுகையில், திறமையான கார் டிரைவரான அஸ்வின் விபத்தில் சிக்கியதாக அறிந்ததும் நம்ப முடியவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aswin friends, can't believe that he is died in the car accident.
Please Wait while comments are loading...