For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 பேக்ஸ் வைத்து, சிவலிங்கத்தை தூக்கியபடி... ‘பாகுபலி’ விநாயகர்...!

Google Oneindia Tamil News

சென்னை: விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. விதம் விதமான விநாயகர் சிலைகள் நாடு முழுவதும் தயாராகி வருகின்றன.

இம்மாதம் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சிலை தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிலை தயாரிப்புப் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

வழக்கமாக சாதாரண வகை விநாயகர் சிலைகளுடன் அந்தந்த கால கட்டத்து நாட்டு நடப்புக்கேற்ப சிலைகளைத் தயாரிப்பு இப்போது பேஷனாகி விட்டது.

Baahubali Ganesh Idols

கார்கில் விநாயகர்...

முன்பு கார்கில் போர் நடந்தபோது கார்கில் விநாயகர் சிலைகள் பிரபலமாகின. உலகக்கோப்பை சமயத்தில் கையில் பேட்டுடனும், பந்துடனும் விநாயகர் சிலையை உருவாக்கினார்கள்.

பாகுபலி...

இந்த நிலையில் தற்போது பாகுபலி படம் பிரபலமாகி விட்டதால் அதை வைத்து சூப்பராக ஒரு விநாயகர் சிலை தயாராகியுள்ளது.

பிரபாஸ் மாதிரியே...

அதாவது பாகுபலி படத்தில் பிரபாஸ் பெரிய சிவலிங்கத்தை தோளில் வைத்துத் தூக்கி வரும் காட்சியை அப்படியே சுட்டு விட்டனர் சிலை தயாரிப்பவர்கள். அதாவது நின்ற நிலையில் விநாயகர், சிவலிங்கத்தைத் தூக்கி வருவது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

6 பேக்ஸ்...

பிரபாஸ் போலவே இந்த விநாயகரும் கட்டழகராக, 6 பேக் வைத்து "ஆர்ம்ஸ்" காட்டி அசத்துகிறார் என்பதுதான் இதன் ஹைலைட்டே.

4 கைகள்...

கைகளில் வளையம் மாட்டி, பிரபாஸ் போலவே இந்த விநாயகரின் உடையும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. ஆனால், பிரபாஸை விட கூடுதலாக இந்த விநாயகருக்கு நான்கு கைகள் வைத்துள்ளார் அதன் தயாரிப்பாளர்.

English summary
Baaubali, the movie which took box-office by storm has also inspired Ganesha idol makers as many of them are depicting the elephant -headed god as carrying Shiva Lingam in their statues this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X