For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெக்கை கட்டி பறக்குது பார் ஏட்டய்யாவோட சைக்கிள்... ரோந்து சைக்கிள்களை வழங்கினார் ஜெ.!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சைக்கிளில் போலீசார் ரோந்து செல்லும் திட்டம் சென்னையில் மீண்டும் அமலுக்கு வருகிறது. ரோந்து பணிக்காக வாங்கப்பட்ட 200 சைக்கிள்களை காவல்துறையினருக்கு வழங்கி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையினர் சைக்கிளில் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். பழைய காலங்களில் போலீசார் சைக்கிளில் ரோந்து செல்லும் பணி தீவிரமாக அமலில் இருந்தது.

லத்தி, டார்ச் லைட் மற்றும் விசில் உடன் அந்த காலத்தில் போலீசார் சைக்கிளில் ரோந்து வரும் காட்சிகுற்றவாளிகளை கதி கலங்க வைக்கும்.

இரவு நேரத்தில் விசில் ஊதிக்கொண்டே போலீசார் சைக்கிளில் தெருத்தெருவாக ரோந்து வருவார்கள். கால்நடையாக கூட ரோந்து செல்லும் பழக்கம் அமலில் இருந்தது.

சைக்கிள் ரோந்து

சைக்கிள் ரோந்து

சைக்கிள், கால்நடை ரோந்து திட்டம் அமலில் இருந்தபோது குற்றங்கள் வெகுவாக குறைந்து காணப்பட்டன. தற்போது சைக்கிள் ரோந்து, கால்நடையாக ரோந்து செல்லும் திட்டங்களுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள், ஜீப், இன்னோவா கார்களில் போலீசார் ரோந்து செல்லும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.

குறைந்து போன பயம்

குறைந்து போன பயம்

குற்றவாளிகளை வாகனங்களில் விரைந்து சென்று பிடிக்க ஏதுவாக இருக்கும் என்று இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இந்த திட்டங்களுக்கு சைக்கிள் ரோந்து, கால்நடை ரோந்து போல் மவுசு இல்லை என்று கூறப்படுகிறது.

சந்துகளில் குற்றங்கள்

சந்துகளில் குற்றங்கள்

இந்த ரோந்து பணியால் குற்றவாளிகள் மத்தியிலும் பயம் இல்லாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நகரங்களில் உள்ள சிறிய தெருக்கள் மற்றும் சந்துகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

மீண்டும் சைக்கிள் திட்டம்

மீண்டும் சைக்கிள் திட்டம்

சென்னையில் நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையில் மீண்டும் சைக்கிள் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக, காவல் துறைக்கு 200 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன.

வரவேற்பு

வரவேற்பு

ரோந்து செல்லும்போது, பாதசாரிகளை எச்சரிக்கும் வகையில், மைக் உள்ளிட்ட அம்சங்கள் சைக்கிளில் இடம்பெற்றுள்ளன. சைக்கிள் ரோந்து திட்டம் மூலம் நல்ல உடற்பயிற்சி கிடைக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு போலீசார் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

ஜெயலலிதா தொடக்கம்

ஜெயலலிதா தொடக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்து 200 சைக்கிள்களை வழங்கினார். ஒரு காவல் நிலையத்துக்கு 3 சைக்கிள்கள் வீதம் சென்னை பெருநகரில் உள்ள முக்கிய காவல் நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது.

English summary
The Chennai City Police have decided to hit the streets, literally. The force is returning to its roots of bicycle patrol, which would increase the ir presence on the streets and take them closer to the public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X