யோகா என்னும் உடல் பயிற்சியை வைத்து அரசியல் செய்கிறது பாஜக- சுப.வீ. சாடல்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: பாரதிய ஜனதா கட்சி, உடற்பயிற்சியான யோகாவை வைத்துக் கூட அரசியல் செய்கிறது என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக சாடியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் திமுக தலைவர் கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபை வைரவிழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன்,''பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு அதிமுக கட்சியை ஒபிஎஸ் அணி, எடப்பாடி அனி என பிரித்து வைத்துள்ளது.

 Bjp doing politics even in exercise yoga said suba. vee

பாஜக, மதத்தை வைத்து அரசியல் செய்து பார்த்தது. அடுத்த முயர்சியாக மாட்டை வைத்து அரசியல் செய்தது. அதோடு நில்லாமல் நீட் தேர்வை வைத்தும் அரசியல் செய்து வருகிறது. இதெல்லாம் போதாது என்று, உடற்பயிற்சியான யோகாவை வைத்து அரசியல் செய்கிறது. என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது'' என கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bjp doing politics even in exercise yoga and Bjp never be successful in Tamilnadu said Suba.vee
Please Wait while comments are loading...