பொதுத் தேர்தல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துவிட துடிக்கிறது.. துரைமுருகன் பரபர!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்தேர்தல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துவிட துடிக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் பொதுத் தேர்தல் வரும் என்றும் அவர் கூறினார்.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறது.

BJP wants to rule in Tamilnadu: Duraimurugan

இந்நிலையில் திமுக சார்பில் சென்னையில் கருணாநிதி 94 பிறந்த நாள் வைரவிழா கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய துரைமுருகன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக துடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் பொதுத் தேர்தல் வரும் என்றும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former DMK Minister Duraimurugan said in a meeting Tamil Nadu will face the general election within 6 months. BJP wants to rule in Tamilnadu He said.
Please Wait while comments are loading...