சட்டசபை செயலராக பூபதி நிரந்தரமாக நியமனம் - ஆளுநர் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை பொறுப்பு செயலராக பதவி வகித்து வந்த பூபதியை நிரந்தரமாக பணி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையின் செயலாளராக பதவி வகித்த ஜமாலுதீனின் பதவிக்காலம் மே 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இவருக்குப் பின்னர். சட்டசபை கூடுதல் செயலராக இருந்த பூபதி சட்டசபை பொறுப்பு செயலராக நியமிக்கப்பட்டார்.

Boopathy is Assembly secretary

கடந்த 3 மாதமாக பொறுப்பு செயலாளராக பதவி வகித்து வந்த பூபதி நிரந்தர செயலளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் இவரது பணிக்காலம் நிறைவடைய உள்ளது.

புதிய செயலராக அறிவிக்கப்பட்டுள்ள பூபதி சபாநாயகர் தனபாலிடம் வாழ்த்து பெற்றார். 1983ல் சட்டசபை உதவிப் பிரிவு அதிகாரியாக பூபதி அரசுப் பணியில் இணைந்தவர். பூபதி இன்றே தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu governor announce new assembly secretary Bhupathi.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற