For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்கீரன் கோபால் உள்ளிட்ட மூவர் மீது முதல்வர் ஜெ. அவதூறு வழக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக நக்கீரன் நிர்வாகம் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

C M files case against Nakkeeran editor

சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வாரம் இருமுறை வெளியாகும் நக்கீரன் பத்திரிகையில், கடந்த மே 24-ந் தேதி இதழில், 'அமைச்சர் முனுசாமி நீக்கம்- மீண்டும் சசிகலா ஆதிக்கம்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியில், சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கும், நன்மதிப்புக்கும் குந்தகம் ஏற்படும் விதமாக பல ஆதாரமற்ற பொய்யான தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

எனவே என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், தலைமை நிருபர் இளையசெல்வன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

English summary
Chief minister J. Jayalalithaa has filed a defamation case against 3 persons, including the editor of the bi-weekly, Nakkeeran, and a new Tamil film director, in a city court in Chennai on Monday for publishing a defamatory article in a recent issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X