For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லாத 500, 1000 நோட்டுக்களை எப்படி மாற்றுவது.. இந்த படிவம் இருந்தால்தான் முடியும்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான படிவம் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நள்ளிரவில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. இந்த நோட்டுக்களை எப்படி மாற்றுவது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு போங்கள். அங்கே ஒரு படிவம் கொடுப்பார்கள் அதை பூர்த்தி செய்து கொடுங்கள். பணத்தை மாற்றிவிடலாம்.

மத்திய அரசு திடுதிப்பென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நேற்று அறிவித்தது. இதனால் எல்லோரும் தன்னிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்ற அச்சத்தில் உள்ளனர். இதற்காக நான்கைந்து முறை அலைந்து பின்னர் பணத்தை மாற்ற வேண்டுமா, எப்படி மாற்றுவது என்பது குறித்தெல்லாம் கேள்விகள் பல மக்களிடையே இருக்கும்.

Cannot exchange your old 500 and 1000 notes without this form

பணத்தை மாற்றுவதற்கு பெரிய வேலைகள் ஒன்றுமில்லை. பணத்தை மாற்றுவதற்கான ஒரு படிவத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கொடுத்தால் போதும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அப்போது, அடையாள அட்டையை மறக்காமல் நீங்கள் கையில் எடுத்துச் செல்லுங்கள். அவ்வளவுதான்.

புதிதாக வழங்கப்படும் படிவத்தில் உங்கள் பெயர், நீங்கள் கொண்டு செல்லும் அடையாள அட்டை குறித்த விவரங்கள், மாற்ற உள்ள 500 ரூபாய் தாள்கள் எத்தனை, 1000 ரூபாய் தாள்கள் எத்தனை, கையெழுத்து, இடம், தேதி ஆகியவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இந்தப் படிவங்களை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தலாம். மார்ச் 31ம் தேதி வரை அடையாள அட்டைகளுடன் சென்று பணத்தை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனால் மார்ச் 31 வரை நமக்கு பழைய தாள்களை மாற்ற நாள் இருக்கிறது.

கார்டுகள் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்வது, பொருட்களை வாங்குவது, காசோலைகள் கொடுப்பது, வரைவோலை கொடுப்பது, இண்டர்நெட் மூலமாக பணத்தை மாற்றுவது உள்ளிட்ட சேவைகளில் எவ்வித தடங்களும் இல்லை. அதனை எப்போதும் போல் செய்துக் கொள்ளலாம். தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கும் இந்த சேவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால், ஏடிஎம் மையங்களுக்கு சென்று பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம் மையங்களில் இருந்து ஒரு கணக்காளர் எடுக்க முடியும். வங்கியில் சென்று பணம் எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதுவும் வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.

English summary
The government today released the form that will be used to exchange the old notes of Rs. 500 and 1000 denomination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X