For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி இல்லை-மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக பதில் அனுப்பியுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கால் நூற்றாண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர்களை மாநில அரசு தமக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யலாம் என கடந்த ஆண்டி டிசம்பர் 2-ந் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Centre rejects TN govt's proposal on 7 Tamils release

இதனடிப்படையில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டு கடந்த மாதம் 2-ந் தேதி மத்திய அரசுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இந்த விவகாரம் அப்போது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதனிடையே தமிழக அரசின் கடிதத்துக்கு மத்திய உள்துறை செயலர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது; இவ்வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகையால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை தற்போது 2-வது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Central government has turned down a proposal of the Tamil Nadu government to free seven convicts in the Rajiv Gandhi assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X