For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசு உத்தரவை மீறும் ஐ.டி. நிறுவனங்கள்.. இன்று விடுமுறை கிடையாதாம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள போதிலும், சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று வழக்கம் போல இயங்குவதாக அறிவித்துள்ளன.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

IT company

இருப்பினும் இன்று சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் இயங்கும் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் நிறுவனங்கள் செய்தி அனுப்பியுள்ளது. அதில் வழக்கம் போல இன்று அலுவலகங்கள் இயங்கும், பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி அனுஷ்டிக்கப்படும் என்றும் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.. இன்று அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு, மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை ஐ.டி. நிறுவனங்கள் மீறுவது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.

English summary
TN govt has decared holiday tomorrow on the eve of Dr Abdul Kalam's funerals tomorrow. But most of the IT Companies in Chennai have informed their staffst that business will go as usual with a 2 minute silent condolnece.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X