சென்னையில் மறுபடியும் ஸ்விட்ச் ஆன் ஆன "ஏசி" .. செம கிளைமேட் பாஸ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  சென்னை: மீண்டும் பெய்துவரும் மழையால் கிளைமேட் சில்லாகியுள்ளது. குளிர் காற்றும் வீசி வருவதால் நகரின் பெரும்பாலான பகுதி ஏசி அறைபோல் உள்ளது.

  சென்னையில் நேற்று முழுவதும் விடாமல் கொட்டித் தீர்த்த மழை காலையில் கொஞ்சம் இடைவெளி விட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை விறுவிறுவெ பார்த்துக்கொண்டனர்.

  பின்னர் பிற்பகலில் சென்னையை சூழ்ந்த கருமேகம் மழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. சாந்தோம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

  காற்றுடன் சாரல்

  காற்றுடன் சாரல்

  மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

  ஏசியை ஆன் செய்ததுபோல்

  ஏசியை ஆன் செய்ததுபோல்

  நகர் முழுவதும் குளிர் நிலவி வருகிறது. இதனால் நகர் முழுவதும் ஏசியை ஆன் செய்தது போல் குளிர்ச்சியாக உள்ளது.

  இன்றும் நீடிக்கிறது

  இன்றும் நீடிக்கிறது

  நேற்று முழுவதும் இதே நிலையில் தான் சென்னை இருந்தது. இந்நிலையில் இன்றும் பிற்பகலுக்குப் பிறகு அதே நிலை நீடிக்கிறது.

  மீண்டும் தேங்கிய மழைநீர்

  மீண்டும் தேங்கிய மழைநீர்

  காலையில் காய்ந்த வெயிலால் சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் ஓரளவு வடிந்தது. தற்போது மீண்டும் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

  ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

  ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

  இதனால் சென்னை அண்ணாசாலை, நந்தனம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

  மீண்டும் ஊட்டிபோல் சென்னை

  மீண்டும் ஊட்டிபோல் சென்னை

  மாலை 5 மணிக்கே சென்னை நகர் இருண்டு போயுள்ளது.வெயில் இன்றி கொட்டும் சாரல் மழையால் சென்னை மீண்டும் ஊட்டிபோல் மாறியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Throught Chennai gets rain and drizzling and Chill air. Due to this Chennai looks like Ooty. Some places facing heavy traffic jam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற