கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்களுக்காக காத்திருக்கும் பல கிலோ பலகார பானைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஓட்டி நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோயிலில் பக்தர்களுக்காக வழங்க பல கிலோ பலகார பானைகள் தயாராக உள்ளன.

தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

 Colourful Preparations for Sri Krishna Jayanthi celebration at Nellai

கிருஷ்ண ஜெயந்திக்கு பானை நிறைய பலகாரம் வழங்கும் முறை இங்கு பிரசித்தம். இந்த கோயிலின் கோசாலையில் நிறைய பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. கோசாலையின் மத்தியில் இருக்கும் கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்திக்கு பானை தயாரிக்கும் பணி ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கி விடும். பானைகளில் வர்ணம் தீ்ட்டுதல், ஓவியம் வரைதல் போன்றவை மாத கணக்கில் நடக்கும். தொடக்கத்தில் 25 பானைகள் வைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 12,500 பானைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பானையும் சுமார் 3 லிட்டர் கொள்ளளவு கொண்டவை என கூறப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் இவைகளில் பலகாரம் நிரப்பப்பட்டு பூஜைகளில் வைக்கப்படுகிறது. மறுதினம் இவைகள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக பலகார பானைகள் வழங்கப்படுகிறது.

கிருஷ்ணர் படையலுக்கு பதார்த்தங்களான முருக்கு, சீடை, தேன்குழல், லட்டு, ஜிலேபி, பர்பி, மைசூர் பாகு, ஏணி மிட்டாய், கார சேவு என பலதரப்பட்ட பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நெல்லையைச் சேர்ந்த பிரபல ஹோட்டல்களில் பணிபுரியும் தேர்ந்த சமையல்காரர்களால் தயாரிக்கப்படுகிறது.

பிரசாதம் பெறுகிற பக்தர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே பதிவு செய்து விடுகின்றனர். இந்த பிரசித்த பெற்ற விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pots Full of Sweets will given to all devotees as Prasadam, the Yettezhuththu Perumal Dharmapathi at Arugankulam near Nellai is gearing up for Sri Krishna Jayanthi celebrations.
Please Wait while comments are loading...