• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல மதங்கள்.. பொது சிவில் சட்டத்துக்கு “நோ” - ஆர்எஸ்எஸ் வசம் உள்ள மோடி அரசை வீழ்த்தனும் - முத்தரசன்

Google Oneindia Tamil News

நெல்லை: பல மதங்கள் சாதிகளை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை ஒரு போதும் ஏற்க இயலாது என்றும், பாஜக ஆட்சி ஆர்.எஸ்.எஸ். கரங்களில் உள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 20வது மாநில மாநாடு இன்று தொடங்கியது. மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் கேரள தொழில் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஐடியூசி மாநில தலைவர் சுப்பராயன் மற்றும் பொதுச் செயலாளர் மூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொழிற்சங்க கொடியேற்றி வைத்து நினைவு ஜோதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உதடு ஒன்று பேசுகிறது உள்ளம் ஒன்று செய்கிறது! பிரதமரை விமர்சித்த முத்தரசன்! ஆளுநர் மீது கடும் அட்டாக் உதடு ஒன்று பேசுகிறது உள்ளம் ஒன்று செய்கிறது! பிரதமரை விமர்சித்த முத்தரசன்! ஆளுநர் மீது கடும் அட்டாக்

பொதுத்துறை நிறுவனங்கள்

பொதுத்துறை நிறுவனங்கள்

இந்த மாநாட்டில் பேசிய முத்தரசன், "வாஜ்பாய் உள்பட மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த அனைவரும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினர். ஆனால் பிரதமர் மோடி எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனங்களை கூட உருவாக்கவில்லை ஏற்கனவே இருந்த அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்கிறார்.

தேசிய கல்விக்கொள்கை

தேசிய கல்விக்கொள்கை

தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்பட அனைவருக்கும் எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. தேசிய கல்வி கொள்கை என்கிற பெயரில் பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் கல்வி மறுக்கப்படும் வாய்ப்புள்ளது. டெல்லியல் விவாசாயிகள் போராடி 200 விவசாயிகளை பலிகொடுத்து வேளாண் சட்டத்தை திரும்ப பெற செய்தார்கள். ஆனாலும் அப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கருப்பு பணம் மீட்பு என கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டது. தற்போது தேர்தல் நெருங்குவதால் வேலை வழங்குவதாக கூறுகின்றனர். மக்களுக்கு எதிராக மூர்க்கத்தனமாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசாக ஒன்றிய அரசு உள்ளது. மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது.

ஒரே நாடு ஒரே மதம்

ஒரே நாடு ஒரே மதம்


மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை பிளவுப்படுத்துகிறார்கள். ஒரே நாடு ஒரே மதம் எப்படி சாத்தியமாகும்? ஒருபோதும் முடியாது நம் நாடு பல மதங்களை கொண்ட நாடு. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. 4600 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன.

 பொதுசிவில் சட்டம்

பொதுசிவில் சட்டம்

பொது சிவில் சட்டத்தை ஒரு போதும் ஏற்க இயலாது. மொழி, மத, சாதி வேறுபாடுகளுக்கு மத்தியில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம் என உலக நாடுகள் நம்மை போற்றுகிறது. பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் கைகளில் உள்ளது. அதனுடைய மனு தத்துவத்தை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அமல்படுத்த எல்லா முயற்சிகளையும் சட்டப்பூர்வமாக மேற்கொண்டு வருகின்றனர்.

2024 தேர்தல்

2024 தேர்தல்


தொழிலாளி என்ற பெயரில் தான் நாம் அனைவரும் ஒன்று சேர முடியும். அது தான் சாத்தியம். தற்போது நாட்டி ஏற்பட்டு உள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு தொழிலாளர்களை நாம் அணி திரட்ட வேண்டும். 2024 தேர்தலில் மோடி அரசை தோற்கடிக்க முடியும். தோற்கடிக்க வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.

English summary
Mutharasan, State Secretary of the Communist Party of India said that, "Uniform civil code can never be adopted in India which had many religions and castes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X