For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்தா புயலால் சென்னையில் விமான போக்குவரத்து பாதிப்பு: பயணிகள் அவதி!

வர்தா புயல் காரணமாக சென்னையில் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் சென்னைக்கு அருகே 140 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் இன்று பகல் சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cyclone affects Chennai : Flights delayed and canceled!

இந்நிலையில் வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டு செல்கின்றன. பிற்பகலில் வர்தா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பிற்பகலில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகின்றன. இதனால் அவசர வேலையாக சென்னை வந்த பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

English summary
Due to the Cyclone all the flights coming to chennai airport and going from chennai has been delayed. From chennai which is going in the afternoon that flights also will be canceled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X