சிட்டி, செங்கல்பட்டு, திண்டுக்கல், கோவை, பெங்களூரு வரை.. "நாடா"வால் செம மழை பெய்யுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயலால் சென்னை, கடலூர் மட்டுமின்றி தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள நாடா புயல் நாளை மறுநாள் புதுச்சேரிக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை முதல் வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில் கனமழை கொட்ட உள்ளது.

Cyclone Nada: TN gears up for heavy rains

இலங்கை அருகே உருவாகியுள்ள நாடா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயலால் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னையில் இருந்து திண்டுக்கல் வரையிலான பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல் கோவை, மைசூரு, மாண்டியா, பெங்களூருவுக்கும் நாடா புயலால் கனமழை கிடைக்கும். வேலூர், சித்தூர் வரையிலான பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India Meteorological Department said that A depression formed over southeast Bay of Bengal in the evening of 29th November. Moving west-northwestwards, it intensified into a deep depression over southeast in the early morning and further into a cyclonic storm “Nada” over southwest and adjoining southeast today.
Please Wait while comments are loading...