போலி ஐடி அதிகாரி விவகாரம்- மாதவன் மீது அன்றே சந்தேகம் எழுப்பிய ஒன் இந்தியா தமிழ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

  சென்னை: தீபாவின் வீட்டுக்குள் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்ததாக கூறப்படும் நாடகத்தை அவரது கணவர் மாதவன்தான் நடத்தியது அம்பலமாகி உள்ளது. இந்த நாடகத்தை மாதவன் நடத்தியிருக்கலாம் என அன்றே ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சுட்டிக்காட்டியிருந்தது.

  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் இல்லாத சூழலில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரி போல் ஒருவர் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் திடீரென தீபாவின் வீட்டு மதில் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார் அந்த போலி அதிகாரி.

  போலீசில் திடுக்கிடும் வாக்கு மூலம்

  போலீசில் திடுக்கிடும் வாக்கு மூலம்

  தற்போது போலீசில் சரணடைந்துள்ள போலி அதிகாரி மித்தேஷ்குமார் என்ற பிரபாகரன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தீபாவின் கணவர் மாதவன் கொடுத்த யோசனையின் அடிப்படையிலேயே தாம் நடித்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உண்மையானது சந்தேகம்

  உண்மையானது சந்தேகம்

  தீபாவின் மீதான பண மோசடி புகார்களை திசை திருப்பவும் பரபரப்பு ஏற்படுத்தவும் மாதவனே இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாம் எனவும் நமது ஒன் இந்தியா தமிழ் சந்தேகம் எழுப்பியிருந்தது. தற்போது மாதவனின் நாடகம்தான் போலி வருமான வரித்துறை சோதனை என்பது அம்பலமாகியுள்ளது.

  தீபாவும் உடந்தை?

  தீபாவும் உடந்தை?

  தமது நாடகம் அம்பலமானதால் மாதவன் போலீசில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இந்த நாடகத்துக்கு தீபாவும் உடந்தையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Fake​ IT officer surrender in Police who claimed that it was Deepa's husband Madhavan planned the Drama.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற