For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசோக்குமார் பதவிக்கு ஆப்பு வைத்தது... ராவ் சகோதரர்களின் "டைரி"க் குறிப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த அசோக்குமார் ஆசைப்பட்டு அபகரிக்க நினைத்த டைரிதான் அவர் தமக்கு தாமே வைத்துக் கொண்ட ஆப்பு என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.

வட சென்னையில் அண்மையில் பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்களை வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தியது. மாதவராவ், சீனிவாசராவ் என்ற இரு சகோதரர்களின் கிடங்குகளில்தான் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த ரெய்டின் போது ராவ் பிரதர்ஸிடம் இருந்து டைரி ஒன்றையும் வருமான வரித்துறை கைப்பற்றினர். அதில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் தொடங்கி தலைமைச் செயலகத்தில் கோலோச்சுகிற அதிகாரிகள் பலருக்கும் 'கப்பம்' கட்டப்பட்ட கணக்கு விவரங்கள் விரிவாக இருந்தன.

டைரி விவகாரம்

டைரி விவகாரம்

பிரச்சனைக்குரிய இந்த டைரிதான் கடந்த சிலவாரங்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடையே ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. இந்த டைரியில் தம்மை தனிமைப்படுத்தி ஓரங்கட்டும் கார்டனுக்கு வேண்டிய அதிகாரிகள் பலரது பெயரும் இருந்திருக்கிறது.

ஜார்ஜூடன் மோதல்

ஜார்ஜூடன் மோதல்

குறிப்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மாதம் ரூ20 லட்சம் கப்பம் கட்டப்பட்டிருந்தது. அப்போது கமிஷனராக இருந்த ஜார்ஜ், கார்டனின் நேரடி தொடர்பில் இருந்தவர். இதனால் அசோக்குமார் உத்தரவுகளை மதிப்பது இல்லை. இது நீண்டகாலமாக அசோக்குமாருக்கு அதிருப்தியாக இருந்தது. தமக்கு வாய்ப்பு கிடைத்த நேரத்தில் ஜார்ஜ் குறித்து போட்டுக் கொடுக்க கமிஷனர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். இந்த ஜார்ஜ் அண்மையில் மீண்டும் கார்டனின் குட்புக்குக்கு வந்தவர்.

டைரியை கைப்பற்ற வியூகம்

டைரியை கைப்பற்ற வியூகம்

ஜார்ஜ் உள்ளிட்ட தமக்கு வேண்டாத அதிகாரிகள் கப்பம் வாங்கிய டைரியை தம் வசமாக்கிக் கொள்ள ப்ளான் போடுகிறார் அசோக்குமார். மத்திய குற்றப்பிரிவில் இருந்த அருணாச்சலம், சிபிஐ-ல் தமக்கு கீழே பணியாற்றியவர். அவரை அழைத்து டைரியின் நகல்களை வாங்கி வரச் சொல்கிறார் அசோக்குமார்.

எகிறிய வருமானவரித்துறை

எகிறிய வருமானவரித்துறை

அருணாசலமும் வருமான வரித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச... அவர்களோ அதெல்லாம் தர முடியாது என 'வார்னிங்' கொடுத்துவிட்டார்கள்.... இந்த விவகாரம் கார்டனுக்கு வேண்டிய தலைமைச் செயலக அதிகாரிகள் டீம் காதுகளுக்குப் போனது...

போட்டுக் கொடுத்த டீம்

போட்டுக் கொடுத்த டீம்

அந்த டீமோ, டைரியை வாங்கி திமுக தலைவர் கருணாநிதிக்கு தகவல்களை பாஸ் செய்ய முயற்சித்தார் அசோக்குமார் என ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டது... ஏற்கனவே சட்டசபை தேர்தலின் போது கருணாநிதியை சந்தித்தார் என்ற அதிருப்தியில் இருந்த ஜெ.வுக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம்.

இதை தெரிந்து கொண்ட அசோக்குமார் இனியும் நம்மால் சமாளிக்க முடியாது என புரிந்து கொண்டு விருப்ப ஓய்வு மனு கொடுத்திருக்கிறார். இதுதான் வாய்ப்பு என ஜெ.வும் ஒப்புதல் கொடுத்துவிட நள்ளிரவில் அலுவலகத்தை காலி செய்துவிட்டு கிளம்பினாராம் அசோக்குமார்.

சொந்த காசில் சூனியம்!

English summary
Andhra Rao brothers Diary also one of the main reason to DGP Ashok Kumar's VRS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X